வான்சுக் சையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வான்சுக் சையம் (Wansuk Syiem) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1956 ஆம் ஆண்டு சூன் மாதம் 25 ஆம் தேதியன்று மேகாலயாவில் இவர் பிறந்தார். 2014-2020 ஆம் ஆண்டின் இரண்டாவது முறையாக இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மேகாலயா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] மேகாலயாவிலிருந்து மாநிலங்களவையில் தனி இடத்தைப் பிடித்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவராக இவர் கருதப்படுகிறார்.

முன்னதாக வான்சுக் சையம் 11/04/2013 அன்று இடைத்தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார், ஏனெனில் 04/02/2013 அன்று பதவியிலிருந்த உறுப்பினர் தாமசு ஏ. சங்மா பதவி விலகல் செய்தார்.[3] மேகாலயா அரசியலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajya Sabha Affidavits". MyNeta.info.
  2. "Wansuk Syiem declared re-elected to Rajya Sabha for 2nd stint". 31 Jan 2015. http://meghalayatimes.info/index.php/front-page/23784-wansuk-syiem-declared-re-elected-to-rajya-sabha-for-2nd-stint. 
  3. "Wansuk becomes first woman Rajya Sabha MP from Meghalaya". பார்க்கப்பட்ட நாள் 18 August 2017.
  4. "Detailed Profile: Syiem Wansuk". Government of India. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்சுக்_சையம்&oldid=3840220" இலிருந்து மீள்விக்கப்பட்டது