வானொலி ( இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானொலி
10, சூன், 1939 தேதியிட்ட இதழ்
முன்னாள் இதழாசிரியர்கள்தீபன், சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், சுமூகன்
வகைவானொலி
இடைவெளிமாதம் இருமுறை
முதல் வெளியீடுசூன் 1938
நிறுவனம்அனைத்திந்திய வானொலி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வானொலி என்பது மாதம் இருமுறை வெளிவந்த தமிழ் இதழாகும்.[1] இது வானொலியின் நிகழ்ச்சி நிரலையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வானொலி பேச்சுக்களின் எழுத்து வடிவத்தையும், வரவிருக்கும் இரண்டு வாரங்களுக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என்ற விபரமும், ஏனைய தகவல்களும் இந்த இதழில் இடம் பெற்றன. இந்த இதழ் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் வாணி, ஆங்கிலத்தில் இந்தியன் லிசனர், உருதுவில் ஆவாஸ், இந்தியில் சாரங் என்ற பெயர்களில் வெளிவந்தது. இந்தியின் சாரங் பிற்காலத்தில் ஆகாஷ் வாணி என்று மாற்றப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்த இதழ் 1938 சூன் முதல் 1987 ஏப்ரல் முதல் சுமார் 50 ஆண்டுகள் சென்னை வானொலி நிலையதில் இருந்து வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக தற்காலிகமாக திருச்சிராப்பள்ளிக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்து பின்னர் மீண்டும் சென்னையில் இருந்து வெளிவந்தது. வானொலி இதழ் முதல் இரு ஆண்டுகள் மாதம் ஒருமுறை, இருமுறை, முன்முறை என பலவாறு வெளிவந்தது. 1940கள் முதல் மாதம் இருமுறை என வெளியானது.

இந்த இதழின் ஆசிரியர் சென்னை வானொலி நிலையத்தின் இயக்குநர் ஆவார். ஆனால் உதவி ஆசிரியராக இருப்பவரே உண்மையான ஆசிரியர். அவ்வகையில் இதன் முதல் பொறுப்பாசிரியக டி. கே. சி.யின் மகனான தீபன் (எ) தெ. சி. தீர்த்தாரப்பன் இருந்தார். இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு திருச்சிராபள்ளிக்கு வெளியீட்டு இடம் மாறியபோது அங்கே ஊழியராக இருந்த சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் பொறுப்பாசிரியராக செயல்பட்டார். இதழின் இறுதி காலத்தில் சுமூகன் என்பவர் பொறுப்பாசிரியராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. நந்தலாலா,தே.தீட்ஷித், கவிஞர் (2022-02-04). "திருச்சி - ஊறும் வரலாறு 30: `காதோடுதான் நான் பேசுவேன்!' அகில இந்திய வானொலி - திருச்சிராப்பள்ளி". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-06-22. {{cite web}}: External link in |website= (help)
  2. "வானொலியைத் தாண்டிய வரலாற்றுப் பெட்டகம்". Hindu Tamil Thisai. 2023-06-18. பார்க்கப்பட்ட நாள் 2023-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானொலி_(_இதழ்)&oldid=3741135" இலிருந்து மீள்விக்கப்பட்டது