வானியற்பியலில் நுண்வில்லையாக்க நோக்கீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் மலையின் உச்சியில் உள்ள வானியற்பியல் (வாநுநோ) தொலைநோக்கி குவிமாடத்தில் மைக்ரோலென்சிங் நோக்கீடுகல்கள்

வானியல் இயற்பியலில் நுண்வில்லையாக்க நோக்கீடுகள் ( வாநுநோ) Microlensing Observations in Astrophysics(MOA ) என்பது நியூசிலாந்து , ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும், [1] நகோயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யசுஷி முராக்கி தலைமையிலானது. தென் அரைக்கோளத்தில் இருந்து இருண்ட பொருள், சூரியப்புறக் கோள்கள், விண்மீன் வளிமண்டலங்களைக் கண்காணிக்க நுண்வில்லைடாக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக 100 அல்லது அதற்கு மேற்பட்ட வரிசையின் அதிக உருப்பெருக்கத்தின் ஈர்ப்பு நுண்வில்லையாக்க நிகழ்வுகளைக் கண்டறிதல் நோக்கீடுகளில் குழு கவனம் செலுத்துகிறது, ஏனெனில் இவை சூரியப் புறக் கோள்களுக்கு அதிக உணர்திறனை வழங்குகின்றன. அவர்கள் ஆத்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிற இடங்களில் உள்ள மற்ற குழுக்களுடன் வேலை இணைந்துசெய்கிறார்கள். நியூசிலாந்தின் மவுண்ட் ஜான் பல்கலைக்கழக ஆய்வகத்தில் 1.8 m (70.9 அங்) இந்தத் திட்டத்துக்காக உருவாக்கிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி நோக்கீடுகள் செய்யப்படுகின்றன . [2]

2020 செப்டம்பரில், நுண்வில்லையாக்க நுட்பங்களைப் பயன்படுத்தும் வானியலாளர்கள், முதன்முறையாக, புவிப் பொருண்மை முரட்டுக் கோல்கல் எந்த விண்மீனாலும் கட்டுபடுத்தப்படாமல், பால்வழி விண்மீன் மண்டலத்தில் விடுபட்டு மிதப்பதையும் கண்டறிந்தனர். [3] ஜனவரி 2022 இல் ஒளியியல் ஈர்ப்பு விள்லையாக்கம் செய்முறையில் (வாநுநோ) இணைந்து, முதல் முரட்டுத்தனமான BH கோல்களை முன்னச்சுப் படிவத்தில் [4] [5] [6] என்று அவர்கள் அறிவித்தனர். அவற்றின் நுட்பம் ஒளியின் பெருக்கத்தை மட்டுமல்ல, நுண்வில்லையாக்க்கத் தரவிலிருந்து BH ஆல் அதன் விலகலையும் அளவிட அழிவகுத்தது.

வாநுநோ(MOA) தொலைநோக்கி கண்ணாடி படங்கள்[தொகு]

கண்டுபிடிக்கப்பட்ட கோள்கள்[தொகு]

இந்த கணக்கெடுப்பின் மூலம் பின்வரும் கிரகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, சில மற்ற ஆய்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கோள் அறிவிக்கப்பட்ட தேதி
MOA-2020-BLG-208Lb அக்தோபர் 2022
MOA-2020-BLG-135Lb ஏப்ரல் 2022
MOA-2014-BLG-472Lb ஜூன் 2021
MOA-2007-BLG-197Lb மே 2015
MOA-2008-BLG-379Lb நவம்பர் 2013
MOA-2011-BLG-322Lb செப்டம்பர் 2013
MOA-பின்-1b மே 2012
MOA-2009-BLG-387Lb பிப்ரவரி 2011
MOA-2007-BLG-400Lb செப்டம்பர் 18, 2008
MOA-2007-BLG-192Lb மே 30, 2008
OGLE-2003-BLG-235/MOA-2003-BLG-53b ஏப்ரல் 15, 2004

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yock, Philip (2012). "Review article - A quarter century of astrophysics with Japan". New Zealand Science Review 69 (3). 
  2. Sumi, T. (1 July 2003). "Microlensing Optical Depth toward the Galactic Bulge from Microlensing Observations in Astrophysics Group Observations during 2000 with Difference Image Analysis". The Astrophysical Journal 591 (1): 204–227. doi:10.1086/375212. Bibcode: 2003ApJ...591..204S. https://iopscience.iop.org/article/10.1086/375212/fulltext/. பார்த்த நாள்: 3 October 2020. 
  3. Mroz, Przemek (29 September 2020). "A terrestrial-mass rogue planet candidate detected in the shortest-timescale microlensing event". The Astrophysical Journal 903 (1): L11. doi:10.3847/2041-8213/abbfad. Bibcode: 2020ApJ...903L..11M. 
  4. Sahu, Kailash C.; Anderson, Jay; Casertano, Stefano; Bond, Howard E.; Udalski, Andrzej; Dominik, Martin; Calamida, Annalisa; Bellini, Andrea et al. (2022-05-25). "An Isolated Stellar-mass Black Hole Detected through Astrometric Microlensing". The Astrophysical Journal 933: 83. doi:10.3847/1538-4357/ac739e. Bibcode: 2022ApJ...933...83S. 
  5. Lam, Casey Y.; Lu, Jessica R.; Udalski, Andrzej; Bond, Ian; Bennett, David P.; Skowron, Jan; Mroz, Przemek; Poleski, Radek et al. (2022-05-31). "An Isolated Mass-gap Black Hole or Neutron Star Detected with Astrometric Microlensing". The Astrophysical Journal Letters 933 (1): L23. doi:10.3847/2041-8213/ac7442. Bibcode: 2022ApJ...933L..23L. 
  6. Bennett, D. P.; Becker, A. C.; Quinn, J. L.; Tomaney, A. B.; Alcock, C.; Allsman, R. A.; Alves, D. R.; Axelrod, T. S. et al. (2002-11-10). "Gravitational Microlensing Events Due to Stellar‐Mass Black Holes" (in en). The Astrophysical Journal 579 (2): 639–659. doi:10.1086/342225. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-637X. Bibcode: 2002ApJ...579..639B. https://iopscience.iop.org/article/10.1086/342225. 

வெளி இணைப்புகள்[தொகு]