வாடெரா, எத்தியோப்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாடெரா (Wadera) தென்கிழக்கு எத்தியோப்பியாவிலுள்ள ஒரு நகரம். ஒரோமியா பிராந்தியத்தின் போரெனா மண்டலத்தில் அமைந்துள்ள இந்த நகரம், கடல் மட்டத்திலிருந்து 1787 மீட்டர் உயரத்தில், 05° 45'வ நிலநேர்க்கோடு, 39° 19'கி நிலநிரைக்கோடுகளில் அமைந்துள்ளது. அருகிலுள்ள வாடெரா வனப்பகுதியின் பெயரால் இது பெயரிடப்பட்டுள்ளது. வாடெரா மாவட்டத்தின் நிர்வாக மையமாக வாடெரா உள்ளது.

இதன் வழியாகச் சென்று நெகெலேவில் முடிவடையும் முதன்மையான அனைத்து-பருவக் காலச் சாலையில் வாடெரா அமைந்துள்ளது. இந்த நகரம் தொலைபேசி மற்றும் தபால் சேவை ஆகிய இரண்டையும் கொண்டிருக்கிறது. தேசிய மின்வழங்கியிலிருந்து எத்தியோப்பியன் மின்னாற்றல் கழகத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது.[1]

மக்கள் தொகையியல்[தொகு]

2005 ஆம் ஆண்டு மத்திய புள்ளிவிவர முகமையின் புள்ளிவிவரங்களின்படி, இந்த நகரத்தில் மொத்தம் 6,999 பேர் உள்ளனர். இவர்களில் 3,537 பேர் ஆண்கள் மற்றும் 3,462 பெண்கள். 1994 ஆம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,912 பேர் மொத்தம் 1,994 பேர் ஆண்கள் மற்றும் 1,918 பேர் பெண்கள். 

குறிப்புகள்[தொகு]

  1. Woreda administration sources, as quoted in Final Report for Aposto-Wendo-Negele (World Bank Report E1546, vol. 1), pp. 71f
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடெரா,_எத்தியோப்பியா&oldid=3765941" இலிருந்து மீள்விக்கப்பட்டது