வாக்குச்சாவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாக்குச்சாவடி (polling station) அல்லது வாக்களிக்கும் நிலையம் என்பது வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் இடமாகும்.[1] அமெரிக்க,[2] பிரித்தானிய[3] ஆங்கிலத்தில் polling station எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆத்திரேலிய ஆங்கிலத்தில் polling place எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

தேர்தல்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒன்று அல்லது இரண்டு நாள் காலப்பகுதியில் நடைபெறுவதால், பெரும்பாலும் பள்ளிகள், தேவாலயங்கள், விளையாட்டு அரங்குகள், உள்ளாட்சி அலுவலகங்கள் ஆகியன வாக்குச் சாவடிகளாகப் பயன்படுகின்றன. இப்பகுதி ஒரு வார்டு, சுற்றுப்புறம், வாக்குப்பதிவு மாவட்டம் அல்லது தொகுதி என்று அழைக்கப்படலாம். வாக்குச் சாவடி அதிகாரிகளால் (தேர்தல் நீதிபதிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது பிற அதிகாரிகள்) தேர்தல் நடத்தப்படுகிறது, அவர்கள் வாக்குச் சாவடிகளைக் கண்காணித்து, தேர்தல் செயல்முறையில் வாக்காளர்களுக்கு உதவுகிறார்கள். கூர்ந்து நோக்குபவர்கள் அல்லது வாக்கெடுப்புப்-பார்வையாளர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு செயல்முறையின் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதி செய்கிறார்கள்.

வாக்குச்சாவடி[தொகு]

வாக்குச் சாவடி[4] என்பது வாக்களிக்கும் நிலையத்தில் உள்ள ஓர் அறையாகும், அங்கு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இரகசியமாக வாக்களிக்க முடியும்.[5][6][7] பொதுவாக வாக்குச் சாவடிக்கு அணுகல் ஒரு நபருக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது, வாக்காளர்களுக்கு உதவி தேவைப்படும் சமயங்களில் மட்டும் அவர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் ஆணைய விதிகளுக்கு உட்பட்டு இன்னொரு நபர் அனுமதிக்கப்படுவார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றவர்கள் பார்க்க இயலாத வகையில் வைக்கப்பட்டிருக்கும்.

வரலாறு[தொகு]

"வாக்கெடுப்பு" என்ற வார்த்தைக்கு "உச்சந்தலை" அல்லது "தலை" என்று பொருள்படும்.சில நேரங்களில் ஒரு திறந்த மைதானத்தில் மக்களை ஒன்றிணைத்து தலைகளை எண்ணுவதன் மூலம் வாக்குகள் எடுக்கப்பட்ட போது இவ்வாறு அழைக்கப்பட்டது).[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "polling place - definition of polling booth in English". Oxford Dictionaries. Archived from the original on October 26, 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.
  2. "polling place - definition of polling booth in English". Oxford Dictionaries. Archived from the original on October 26, 2013. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.
  3. "polling station - definition of polling station in English". Oxford Dictionaries. Archived from the original on September 25, 2016. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.
  4. "Oxford Dictionaries". Archived from the original on October 27, 2014. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  5. "Oxford Dictionaries". Archived from the original on October 27, 2014. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  6. "Voting at a Polling Place". Australian Electoral Commission. Archived from the original on 2 May 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
  7. "Voting in person". The Electoral Commission. Archived from the original on 2 June 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2013.
  8. "Polling & Democracy: An Uneasy Relationship | On the Media". WNYC. Archived from the original on 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.
  9. Lepore, Jill (November 9, 2015). "Are Polls Ruining Democracy?". The New Yorker – via www.newyorker.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்குச்சாவடி&oldid=3934816" இலிருந்து மீள்விக்கப்பட்டது