வள்ளூரி பாலகிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளூரி பாலகிருஷ்ணா
பிறப்பு1925
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்அஞ்சிகாடு
பணிநடிகர்

வள்ளூரி பாலகிருஷ்ணா ( Valluri Balakrishna ) ஒரு இந்திய நடிகரான இவர், முதன்மையாக தெலுங்குப் படங்களில் நகைச்சுவை நடிகராகத் தோன்றினார். இவர் நகைச்சுவை நடிகராக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால் பாதாள பைரவி திரைப்படத்தில் என். டி. ராமராவ் உடன் இவர் நடித்த அஞ்சி காடு [1][2][3] என்ற பாத்திரம் இவரை பார்வையாளர்களிடையே பிரபலமாக்கியது. மிகவும் பிரபலமான மாயாபஜார் படத்திலும் சாரதி என்ற பாத்திரத்தில் நடித்தார். அவர் நாட்டுப்புற, சமூக மற்றும் புராண படங்களில் தனித்துவமான பாத்திரங்களில் நடித்தார்.

பாதாள பைரவி படத்தின் மூலம் பாலகிருஷ்ணாவின் நடிப்பால் மிகவும் ஈர்க்கப்பட்ட மற்றொரு தெலுங்கு நகைச்சுவை நடிகர் ராஜபாபு ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளில் இக்கலைஞரிடம் ஆசி பெறுவார்.[4] ராஜபாபு ஒரு நடிகனாவதற்கு முன்னர் பாலகிருஷ்ணாவின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு பாதாள பைரவி படத்தை சுமார் 90 முறை பார்த்ததாக தெரிவித்தார்.

திரைப்படவியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff, Reporter. "Andhra Bhoomi: సినిమా అంటే పూలపాన్పు కాదు". archive.andhrabhoomi.net. Venkata Ramireddy. Archived from the original on 1 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  2. Staff, Reporter. "తాగని విలన్". sakshi.com. Jagati Publications. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
  3. Staff, Reporter. "జై పాతాళభైరవి !". suryaa.com. SPR Publications (Pvt) Ltd. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Gorusu, Jagadeeswar Reddy (20 February 2008). నవ్య వ్యాసం: మధ్యలోనే ఆరిపోయిన నవ్వుల కొవ్వొత్తి. Hyderabad: Vemuri Radhakrishna. p. 53.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளூரி_பாலகிருஷ்ணா&oldid=3712775" இலிருந்து மீள்விக்கப்பட்டது