வலைவாசல்:ஹொங்கொங்/சிறப்புக் கட்டுரை/6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்டோரியா துறைமுகத்திற்கு முன்பாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும். இதன் நீளம் 440 மீட்டராகும். இது ஹொங்கொங் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள், ஒழுங்கையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான விக்டோரியா துறைமுகமும், அந்த துறைமுகக் கடல் பரப்புக்கு எதிரே தெரியும் ஹொங்கொங் தீவின் அழகியக் காட்சியும் காண்போரை கவரச் செய்யும். மேலும்...