வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமயகுரவர் என்போர் சைவசமயத்துக்குத் தொண்டாற்றிய நால்வராவர். அவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பவராவர். நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் தமிழ் நாட்டிலுள்ள பல திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டுப் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. மறைந்துபோன பாடல்கள் போக, இப்போதுள்ள இவர்களின் பாடல்கள் ஏழாயிரம் ஆகும். அடுத்த நூற்றாண்டில் வந்த சுந்தர மூர்த்தி நாயனார் பாடல்கள் 1000. இம்மூவரின் பாடல்களும் தேவாரம் என்று போற்றப் பெறுகின்றன.ஞானசம்பந்தர் கையில் தாளம் ஏந்தி, பாடியும் ஆடியும் சிவனை வழிபட்டார். பாணர் குடும்பத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவருடைய பாடல்களுக்கு யாழ் இசைத்து வந்தார். ஞானசம்பந்தர் தம் பாடல்களில் அந்தந்த ஊர்க் கோயில்களைப் பாடுமிடத்தில் கோயில்களைச் சூழ்ந்த இயற்கை அழகுகளையும், கற்பனைச் சுவையுடன் எடுத்துரைத்துப் பாடியுள்ளார்.