வலைவாசல்:கேரளம்/சிறப்புக் கட்டுரை/0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகினியாட்டம்

மோகினியாட்டம் தென் இந்திய மாநிலமான கேரளாவில் நடைபெறும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும். மோகினியாட்டம் தஞ்சை நால்வருள் ஒருவரான வடிவேலுவால் வளர்க்கப்பட்ட நடன வகை. பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்கள் மோகினியாட்டத்தில் காணக்கிடைக்கின்றன. மோகினி என்ற சொல் ஒரு அழகான பெண்ணென்றும், ஆட்டம் நடனம் என்றும் பொருள் படும். பாற்கடலிலிருந்து தோன்றிய அமிர்தத்தை விநியோகிக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய மோகினியே இந்த நடனக் கலையின் பெயருக்கு மூல காரணம் ஆகும். இது லாசியம் நடனமாகும்.