வரதராஜ பெருமாள் கோவில், சூளகிரி

ஆள்கூறுகள்: 12°39′50″N 78°00′43″E / 12.664°N 78.012°E / 12.664; 78.012
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரதராஜ பெருமாள் கோவில்
வரதராஜ பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
வரதராஜ பெருமாள் கோவில்
வரதராஜ பெருமாள் கோவில்
தமிழ்நாட்டில் இருப்பிடம்
பெயர்
பெயர்:வரதராஜ பெருமாள் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருட்டிணகிரி
அமைவு:சூளகிரி
ஆள்கூறுகள்:12°39′50″N 78°00′43″E / 12.664°N 78.012°E / 12.664; 78.012
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரசன்ன வரதராஜ பெருமாள் (விஷ்ணு)
பெருந்தேவி மகாலட்சுமி
வரலாறு
கட்டப்பட்ட நாள்:துவாபர யுகம்
அமைத்தவர்:அருச்சுனன், பிற்காலச் சோழர், கிருஷ்ணதேவராயர், போசளர், விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள்.
இணையதளம்:http://srivaradarajaperumaltemple.wordpress.com

வரதராஜ பெருமாள் கோவில்,சூளகிரி (Varadaraja Perumal Temple, Shoolagiri) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள பழமையான விஷ்ணு கோவில் ஆகும்.[1][2][3][4][5] இதன் கர்ப்பக்கிரகம் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. இகோவிலின் மண்டபம்  விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயரால்  கட்டப்பட்டது. பின்னர் ஹொய்சால மன்னர்கள்,  விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்டது.

விளக்கம்[தொகு]

சூளகிரி மலை திரிசூலத்தின் வடிவில் இருப்பதால் இந்த ஊர்சூளகிரி (சூலகிரி) என்று அழைக்கப்படுகிறது.

சிறப்பு[தொகு]

இக்கோவிலில் வரதராஜ பெருமாள் மேற்கு பார்த்துள்ளார். பெருந்தேவி மகாலட்சுமி தாயார் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உத்தராயண காலத்தில் (தை - ஆடி) சூரிய அஸ்தமனத்தின் போது சூரியக் கதிர்கள் பெருமாளின் காலடியில் விழுகிறது.

விழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் மே 21, வரதராஜ பெருமாள் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது சிறப்பு பூஜைகள், யாகம் மற்றும் கல்யாண உற்சவம் போன்றவை அச்சமயத்தில் கோவிலில் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசியின்போது கருடசேவை வெகு விமரிசையாக நடைபெறும்.

கோவில்நடை  காலை 6 மணி முதல் 12  மணி வரையும், மாலை  4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Vararadaraja Perumal Temple - Dinamalar".
  2. "Shoolagiri Varadaraja perumal temple : Tamil".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Vararadaraja Perumal Temple of Shoolagiri : Tamil".
  4. "Vararadaraja Perumal Temple - Shoolagiri: Temples in Krishnagiri District: Tamil".[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Old Temples in India". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.