வந்தனா லூத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வந்தனா லூத்ரா (Vandana Luthra) (பிறப்பு 12 ஜூலை 1959) ஒரு இந்திய தொழில்முனைவோர் மற்றும் விஎல்சிசி ஹெல்த் கேர் லிமிடெட்டின் நிறுவனர் ஆவார், ஆசியா, ஜிசிசி மற்றும் ஆப்பிரிக்காவில் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட [1] [2] பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் ஒரு முயற்சியான அழகு மற்றும் ஆரோக்கியத் துறை திறன் மன்றத்தின் (B & WSSC) தலைவராகவும் உள்ளார்.

அவர் அழகு மற்றும் ஆரோக்கியத் துறை திறன் மன்றத்தின் முதல் தலைவராக 2014 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இந்த மன்றம் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் அழகுத் தொழிலுக்கான் திறன் பயிற்சி அளிக்கிறது. [3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

வந்தனா லூத்ரா புதுதில்லியில் 1959 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு இயந்திர பொறியியலாளர் மற்றும் அவரது தாயார் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார், அவர் அமர் ஜோதி எனும் ஒரு தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். புதுடெல்லியில் உள்ள பெண்களுக்கான தொழில்நுட்பப்பயிலகத்தில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் அழகு, உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் தோல் பராமரிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற ஐரோப்பா சென்றார். [4]

விஎல்சிசி[தொகு]

லூத்ரா 1989 ஆம் ஆண்டில் புதுடெல்லியின் சப்தர்ஜங் மேம்பாட்டு பகுதியில் ஒரு அழகு மற்றும் ஆரோக்கிய சேவை மையமாக விஎல்சிசி -ஐ ஆரம்பித்தார், இது உணவு மாற்றம் மற்றும் உடற்பயிற்சி அடிப்படையிலான எடை மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத்தியது. விஎல்சிசி நிறுவனம் சந்தையில் ஒரு வலுவான தேசிய மற்றும் சர்வதேச முன்னிலையைக் கொண்டுள்ளது. இது எடை மேலாண்மை மற்றும் அழகு திட்டங்களை வழங்குகிறது (தோல், உடல் மற்றும் முடி பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட தோல் மற்றும் அழகுசாதன தீர்வுகள்). [5]

விஎல்சிசி இந்தியாவில் அழகு மற்றும் ஆரோக்கிய சேவைகள் துறையில் மிகப்பெரிய அளவிலான மற்றும் பரவலான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. தற்போது இந்த கடை 153 நகரங்களில் 326 இடங்களில் மற்றும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஜிசிசி பிராந்தியம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் 13 நாடுகளில் செயல்படுகிறது. ஊட்டச்சத்து ஆலோசகர்கள், மருத்துவ வல்லுநர்கள், உளவழி மருத்துவர், அழகுசாதன நிபுணர்கள் மற்றும் அழகு நிபுணர்கள் உட்பட 4,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், விஎல்சிசி இந்திய அழகு மற்றும் ஆரோக்கியத் துறையின் சந்தைப் பங்கில் முன்னணியில் உள்ளது.

இந்நிறுவனம் அதன் துணை நிறுவனமான விஎல்சிசி தனிநபர் பராமரிப்பு நிறுவனம் மற்றும் சிங்கப்பூரில் ஜிவிக் எனும் மூன்றாம் தரப்பு உற்பத்தியில் அதன் தயாரிப்புகள் தொடர்பான வணிகத்தை நடத்துகிறது, இது ஜிவிக் நிறுவனத்தை செப்டம்பர் 2013 இல் வாங்கியது. தற்போது, அதன் GMP சான்றளிக்கப்பட்ட உற்பத்தி ஆலைகள் ஹரித்வார், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 170 விதமான முடி பராமரிப்பு, தோல் பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் வீட்டுக்குள் உட்கொள்ளும் செயல்பாட்டு மற்றும் வலுவூட்டப்பட்ட உணவுகளைத் (விஎல்சிசி ஆரோக்கிய மையங்களில் சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளில்) தயாரித்து சந்தைப்படுத்துகிறது. இந்த தயாரிப்புகள் இந்தியாவில் 100,000 விற்பனை நிலையங்கள், ஜிசிசி பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் மின்வணிகம் வழியாக 10,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. "VLCC". VLCC. 2014. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  2. "BBC Interview of VLCC Founder & Mentor Vandana Luthra". BBC World News - YouTube video. 18 October 2013. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  3. "Anti-Obesity Entrepreneur Vandana Luthra Debuts On Asia's Power Businesswomen 2016 List" (in en-US). dropout dudes. 2017-11-27. https://www.forbes.com/sites/anuraghunathan/2016/04/15/anti-obesity-entrepreneur-vandana-luthra-on-asias-power-businesswomen-2016-list/#fb689d46a9f3. 
  4. "The queen of wellness in India – Dr Vandana Luthra". Inventiva.
  5. "After-hours with the boss: Vandana Luthra". Live Mint. https://www.livemint.com/companies/people/after-hours-with-the-boss-vandana-luthra-11579188169506.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தனா_லூத்ரா&oldid=3616299" இலிருந்து மீள்விக்கப்பட்டது