லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (Life Is Beautiful) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம். இதை சேகர் கம்முலா, சந்திரசேகர் கம்முலா ஆகியோர் கூட்டாக இயக்கியுள்ளார்.[3]சிரேயா, அஞ்சலா சவேரி, அமலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[4][5]
மூன்று நாயகர்களும் நாயகிகளையும் கொண்ட கதை. மூன்று நாயகர்களும் நண்பர்கள். மூவரில் ஒருவனான சீனு, தன் மூத்த தங்கை, இளைய தங்கை, தன் அம்மா ஆகியோருடன் வாழ்கிறான். அம்மாவின் பணியிடமாற்றம் காரணமாக, தன் பாட்டி வீட்டிற்கு இளைய, மூத்த தங்கைகளுடன் செல்கிறான். அங்கே மற்ற இரு கதாநாயகர்களும், அறிமுகமாக, நண்பர்களாக இணைகிறார்கள். நாயகர்கள் தங்களின் நாயகிகளை காதலிக்கிறார்கள். இயல்பான இளைஞர்களைக் கொண்டு கதை நகர்கிறது. நட்பு, காதல் ஆகியவற்றை முதன்மைப்படுத்திய கதை இது.