ரோயா மக்பூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோயா மக்பூப்
رویا محبوب
2012 சூலையில் ரோயா மக்பூப்
பிறப்புஎறாத்து மாகாணம், ஆப்கானித்தான்
தேசியம் ஆப்கானித்தான்
படித்த கல்வி நிறுவனங்கள்எறாத்து பல்கலைக்கழகம்
பணிதொழிலதிபர், தொழில் முனைவோர்
அறியப்படுவதுஆப்கான் சிட்டாடல் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர்- முதன்மை செயல் அலுவலர்

ரோயா மக்பூப் (Roya Mahboob) ஆப்கானித்தானைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் ஆப்கானித்தானின் எறாத்தில் அமைந்துள்ள ஒரு முழு சேவை மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான ஆப்கான் சிட்டாடல் மென்பொருள் நிறுவனத்தை நிறுவி அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறார்.[1] ஆப்கானித்தானில் வீட்டுக்கு வெளியே பெண்கள் வேலை செய்வது இன்னும் அரிதாகவே உள்ள சூழ்நிலையில் அந்நாட்டில் முதல் தகவல் தொழில்நுட்ப பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக இருப்பதற்காக இவர் கவனத்தைப் பெற்றார்.

ஏப்ரல் 18, 2013 அன்று, ரோயா மகபூப், ஆப்கானிஸ்தானில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இணைய வகுப்பறைகளைக் கட்டியமைத்ததற்காகவும் , பிலிம் அனெக்ஸ் நிறுவ்னத்தால் வழங்கப்பட்ட பல மொழி வலைப்பதிவு மற்றும் நிகழ்பட தளமான பெண்கள் என்ற இணைப்புக்காகவும் டைம் பத்திரிகையின் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களுக்காக 2013ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது டைம் சிறப்பு பதிப்பின் 10 வது ஆண்டுவிழா வெளியீடு. பெண்கள் இணைப்பு மேடையில் ஆப்கானித்தான் மற்றும் மத்திய ஆசியாவின் பெண்கள் தங்கள் கதைகளை உலகுக்கு சொல்லும் தளத்தை கொடுக்கிறார்கள். ரோயா மகபூப் பற்றிய டைம் பத்திரிகை அறிமுகம் செரில் சாண்டுபெர்கால் எழுதப்பட்டது, அவர் முகநூலின் தலைமை இயக்க அதிகாரியாவார்.[2]

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரோயா மகபூப் மற்றும் பிற ஆப்கானிய பெண் தொழில்முனைவோரை ஆப்கானித்தான் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தில் சந்தித்தார்.[3] ரோயா இணையவழி திரைப்பட விநியோகத் தளம் மற்றும் ஆப்கானித்தான் மேம்பாட்டுத் திட்டத்தில் வலைத் தொலைக்காட்சி வலைப்பின்னலான பிலிம் அனெக்ஸுடனான பணிகளுக்காகவும் அறியப்படுகிறார்.[4] இவர் போர்ப்ஸ் வர்த்தகம் & தொழில்நுட்பத்தின் தற்போதைய ஆலோசகராகவும் உள்ளார்.[5]

சுயசரிதை[தொகு]

மகபூப் ஆப்கானித்தானின் எறாத்தில் பிறந்தார். ஆனால் சோவியத் படையெடுப்பை அடுத்து அண்டை நாடான பாக்கித்தானிலும் பின்னர் அதைத் தொடர்ந்து ஈரானிலும் வாழ தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்.[6] [7] இவர் 2003இல் ஆப்கானித்தானுக்குத் திரும்பினார். ஊடகத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பிரெஞ்சு அரசு சாரா அமைப்பில் தன்னார்வத் தொண்டு செய்து கொண்டு ஆங்கிலமும் கற்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் பெண்களுக்கு வழங்கப்படும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்ந்தார். மேலும் 2005 இல் எறாத்து பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்காக கணினி அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு இவர் பெர்லின் பலகலைக்கழகத்திலிருந்து வந்த ஒரு குழுவால் கல்வி கற்றார்.[8]

தொழில்[தொகு]

2009 இல் பட்டம் பெற்ற பிறகு, எறாத்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை இயக்குநராகப் பணியாற்றினார், பின்னர் உயர் கல்வி அமைச்சகத்தின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையின் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். அங்கு இவர் பெர்லின் பலகலைக்கழகத்தின்,[9] சர்வதேச மற்றும் கலாச்சார தொடர்பு மையத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பில் பணியாற்றினார்.[10] [11] மே 2011 இல். ஆப்கானித்தானில் வணிகம் மற்றும் நிலைத்தன்மை நடவடிக்கைகளுக்கான பணிக்குழுவின் ஒரு பிரிவான எறாத்து தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழு ஆப்கானித்தான் தொழில்முனைவோரின் தொடக்க வகுப்பில் இவர் சேர்க்கப்பட்டார். இது முன்னாள் பாதுகாப்பு துணைச் செயலாளர் பால் பிரிங்க்லேவால் நிறுவப்பட்டது.

விருதுகளும் கௌரரவங்களும்[தொகு]

  • 2013: டைம் பத்திரிக்கை- "உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர்".[12]
  • 2013: "தேசிய ஜனநாயக நிறுவனம்" -குடிமை புதுமையாக்க கண்டுபிடிப்பாளர்.[13]
  • 2014: திரிபெகா கண்டுபிடிப்பு விருதுகள் [14]
  • 2015: உலக பொருளாதார மன்றம் -இளம் உலக தலைவர்கள் 2015. [15]
  • 2015: மைக்கேல் துகாகிஸ் தலைமைத்துவ உறுப்பினர் [16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Roya Mahboob on Afghanistan Education and Economy". filmannex.com. Film Annex. Archived from the original on 19 April 2013. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.
  2. "Time's 100 Most Influential 2013: Afghani Entrepreneur Roya Mahboob". The Story Exchange. 29 April 2013. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013.
  3. http://www.voanews.com/content/afghan-women-help-drive-recurrent-economy/1628696.html
  4. "Building schools in Afghanistan - Afghan Development Project". Film Annex. Film Annex. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 27 September 2012.
  5. "Forbes School of Business & Technology Board of Advisors | Ashford University". www.ashford.edu. Archived from the original on 2019-03-01. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
  6. ""If I teach them, no one can stop them": Roya Mahboob is fighting to educate the girls of Afghanistan". 8 March 2015. http://www.salon.com/2015/03/08/if_i_teach_them_no_one_can_stop_them_roya_mahboob_is_fighting_to_educate_the_girls_of_afghanistan/. 
  7. "Connecting to modernity". 22 July 2009. http://www.nato.int/cps/en/natolive/news_56509.htm?selectedLocale=en. 
  8. Establishing Academic Structures in Computer Science at Herat University.
  9. [https://web.archive.org/web/20160604024036/http://www.tu-berlin.de/ziik/ பரணிடப்பட்டது 2016-06-04 at the வந்தவழி இயந்திரம்
  10. "Citadel of New York, LLC and Roya Mahboob". Film Annex Capital Partners. Film Annex Capital Partners. Archived from the original on 22 September 2012. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.
  11. "Roya Mahboob". LinkedIn. LinkedIn. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.
  12. Sandberg, Sheryl (2013-04-18). "Roya Mahboob: The World's 100 Most Influential People" (in en-US). Time. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-781X. https://time100.time.com/2013/04/18/time-100/slide/roya-mahboob/. 
  13. Khan, Arif (2019-02-20). "SingularityNET Partners with Roya Mahboob's Digital Citizen Fund". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  14. "Event | Tribeca Disruptive Innovation Awards 2014 - NYU Stern". www.stern.nyu.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  15. "Meet the 2015 class of Young Global Leaders". World Economic Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  16. Admin (2017-09-18). "ROYA MAHBOOB". Michael Dukakis Institute for Leadership and Innovation (MDI) (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோயா_மக்பூப்&oldid=3570033" இலிருந்து மீள்விக்கப்பட்டது