ரூபிக்கின் கனசதுரம்
ரூபிக்கின் கனசதுரம் (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) அங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் புதிர் ஆகும். ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும்.[1][2][3][4][5][6]
1980-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், Rubik's Revenge, ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே சட்டைப்பைக் குற்றி, பேராசிரியருடைய குற்றி என அறியப்பட்டன. பிரமிட் வடிவ பிரமிங்க்ஸ் ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன.
"Rubik's Cube" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Daintith, John (1994). A Biographical Encyclopedia of Scientists. Bristol: Institute of Physics Pub. pp. 771. ISBN 0-7503-0287-9.
- ↑ William Lee Adams (2009-01-28). "The Rubik's Cube: A Puzzling Success". TIME. http://www.time.com/time/magazine/article/0,9171,1874509,00.html. Retrieved 2009-02-05.
- ↑ Alastair Jamieson (2009-01-31). "Rubik's Cube inventor is back with Rubik's 360". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/lifestyle/4412176/Rubiks-Cube-inventor-is-back-with-Rubiks-360.html. Retrieved 2009-02-05.
- ↑ "eGames, Mindscape Put International Twist On Rubik's Cube PC Game". Reuters. 2008-02-06. http://www.reuters.com/article/pressRelease/idUS147698+06-Feb-2008+PNW20080206. Retrieved 2009-02-06.
- ↑ Marshall, Ray. Squaring up to the Rubchallenge. icNewcastle. Retrieved August 15, 2005.
- ↑ "Rubik's Cube 25 years on: crazy toys, crazy times". The Independent (London). 2007-08-16. http://www.independent.co.uk/news/science/rubiks-cube-25-years-on-crazy-toys-crazy-times-461768.html. Retrieved 2009-02-06.
வெளி இணைப்புகள்[தொகு]