ரீமா நானாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீமா நானாவதி
பிறப்பு22 மே 1964 (1964-05-22) (அகவை 59)
அகமதாபாது, குசராத்து, இந்தியா
கல்லறைஅகமதாபாத்
பணிசமூகச் செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
மிகிர் பட்
பிள்ளைகள்(2) இரண்டு
விருதுகள்பத்மசிறீ

ரீமா நானாவதி (Reema Nanavaty), ஒரு இந்திய சமூக சேவகரும், இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் (SEWA) தலைவர்களில் ஒருவரும் ஆவார். [1] மிராய் சாட்டர்ஜி மற்றும் ரெனானா ஜாப்வாலா போன்ற தலைவர்களுடன். சமூக சேவைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால், 2013 ஆம் ஆண்டில், இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

ரீமா நானாவதி இந்திய மாநிலமான குசராத்தில் அகமதாபாத்தில் 22 மே 1964 இல் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் இதே பல்கலைக்கழகத்தில் சூழலியல் நுண்ணுயிரியலில் முதுகலைப்பட்டத்தை 1986 ஆம் ஆண்டு பெற்றார்.[2] இந்திய குடிமைப்பணிகள் தொழிலைத் தேர்ந்தெடுத்த அவர் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் ( ஐஏஎஸ் ) தேர்ச்சி பெற்றார். [3] இருப்பினும், முழுநேர சமூக சேவையை மேற்கொள்வதற்காக இவர் சேவையை விட்டு விலகியதால், அங்கு இவர் தங்கியிருந்தது ஒரு வருடம் மட்டுமே. [1]

நானாவதி இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விலகுவதற்கு முன்னதாக 1986 ஆம் ஆண்டில் சேர்ந்தார். இலா பட் என்ற காந்திய வழி சமூக சேவகர் தொடங்கிய இந்திய சுயதொழில் புரியும் பெண்கள் சங்கம் என்ற அரசு சாரா நிறுவனத்தில் இணைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பொதுச் செயலாளரானதோடு தொடர்ச்சியான பொது சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கிராமப்புற ஏழைகளை மையப்படுத்தி, குஜராத்தில் அதிக மாவட்டங்களுக்கு இந்திய சுயதொழில் புரியும் பெண்கள் சங்கத்தின் பரவலை விரிவுபடுத்தினார். [1] இவரது தலைமையில், இந்திய சுயதொழில் புரியும் பெண்கள் சங்க சுய உதவி குழுக்கள் மற்றும் ரூடி என்ற சில்லறை விநியோக வலையமைப்பு ஆகியவற்றைத் தொடங்கி இந்த அமைப்பின் சகோதரிகள் தயாரித்த பொருட்களை 40,000 வீடுகளுக்கு கொண்டு செல்லத் தொடங்கியது. [1] [3]

2001 ஆம் ஆண்டில், குஜராத் அரசு மற்றும் விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி ஆகியவற்றுடன் இணைந்து, 2001 குஜராத் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஒரு முயற்சியாக ஜீவிகா திட்டத்தை தொடங்கினார். [3] ஒரு வருடம் கழித்து, இவர் 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சாந்தா என்ற நிவாரணத் திட்டத்தை தொடங்கினார். [1] [3] இவர் குஜராத்திலிருந்து இந்திய சுயதொழில் புரியும் பெண்கள் சங்கத்தையும் அதன் செயல்பாடுகளைம் இதர மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றார். இப்போது இந்த அமைப்பும் அதன் செயல்பாடுகளும் ஜம்மு -காஷ்மீர் முதல் அசாம் வரை நாடு முழுவதும் பரவியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானித்தான், பூடான் மற்றும் இலங்கையிலும் அவர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். [1] [3] கிராமங்களில் கைவினைஞர்களின் வளர்ச்சியை கவனிக்கும் ஒரு பிரிவான இந்த அமைப்பின் வர்த்தக வசதி மையத்தை (FTC) வளர்ப்பதே இவரது தற்போதைய பணி. [4] [5] [6] இவரது இந்த அமைப்பு ஒரு கோடியே 70 இலட்சம் மகளிரையும் அவர்களது குடும்பங்களையும் சென்றடைந்துள்ளது. இவர் கைவினைஞர்கள், கலைஞர்கள், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள் என்று பலவகைப்பட்ட மக்களையும் அவர்களது எல்லைகளைத் தாண்டி தேசிய அளவில் ஒருங்கிணைக்க ஒரு முயற்சியயை மேற்கொண்டிருந்தார் எனலாம்.

2013 ஆம் ஆண்டில், இந்திய அரசு ரீமா நானாவதியை இந்தியக் குடிமக்களுக்கான நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ வழங்கி கௌரவித்தது. [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "SEWA". SEWA. 2014. Archived from the original on 25 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 17 October 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Reema Nanavaty". World Economic Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-13.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "DNA India". DNA India. 21 April 2013. பார்க்கப்பட்ட நாள் 17 October 2014.
  4. "DNA 1". DNA India. 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 17 October 2014."DNA 1". DNA India. 26 January 2013. Retrieved 17 October 2014.
  5. "Como Foundation". Como Foundation. 2014. பார்க்கப்பட்ட நாள் 17 October 2014.
  6. "Indian Express". Indian Express. 10 January 2011. பார்க்கப்பட்ட நாள் 17 October 2014.
  7. "Padma 2013". The Hindu. 26 January 2013. http://www.thehindu.com/news/national/list-of-padma-awardees/article4345496.ece. "Padma 2013". The Hindu. 26 January 2013. Retrieved 10 October 2014.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீமா_நானாவதி&oldid=3569839" இலிருந்து மீள்விக்கப்பட்டது