ரியோ பிரகடனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ரியோ பிரகடனம் (Rio Declaration on Environment and Development), என்பது பொதுவாக ரியோ பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. இது 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் "சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு பற்றிய மாநாட்டில்" தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். இது முறைசாரா முறையில் பூமி உச்சி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. ரியோ பிரகடனம் எதிர்கால நிலையான வளர்ச்சியில் நாடுகளுக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் 27 கொள்கைகளைக் கொண்டிருந்தது. இதில் 175 நாடுகள் கையெழுத்திட்டன.

வரலாறு[தொகு]

ரியோ பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட ரியோ மாநாடு 1992 சூன் 3 முதல் 14 வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆவணத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்குப் பன்னாடுச் சமூகம் இரண்டு முறை கூடியுள்ளது. முதலில் நியூயார்க் நகரில் 1997-ல் ஐ.நா. பொதுச் சபை அமர்வின் போதும், பின்னர் 2002-ல் ஜோகன்னஸ்பர்க்கிலும் கூடியது. இந்த ஆவணம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியது. 2007ஆம் ஆண்டின் சான்றுகள், சுற்றுச்சூழல் இலக்குகள் சிறிதளவே இதன் மூலம் எட்டப்பட்டதாகக் கூறுகின்றன.[1]

உள்ளடக்கம்[தொகு]

"பூமியின் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்த இயல்பு, "எங்கள் வீடு" என்று குறிப்பிடும் ரியோ பிரகடனம் 27 கொள்கைகளை அறிவித்தது. முதல் கொள்கையானது நீடித்த வளர்ச்சி என்பதை முதன்மையாகக் கொண்ட மனிதர்களைப் பற்றியது. இவர்கள் இயற்கையோடு இயைந்த ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழத் தகுதியுடையவர்கள்.[2] மாநிலங்கள் சுற்றுச்சூழல் சட்டத்தை இயற்றும் என்ற எதிர்பார்ப்பைச் சரத்து 11 உருவாக்குகிறது. மேலும் சரத்துகளின் முன்னெச்சரிக்கை கொள்கையின் சூத்திரங்களும் அடங்கும். இது "நாடுகள், அவர்களின் திறன்களுக்கு ஏற்ப பரவலாகப் பயன்படுத்தப்பட வேண்டும்" (சரத்து 15), மற்றும் மாசுபடுத்துபவர் பணம் செலுத்தும் கொள்கையினை மேற்கொள்ள பொது நலனுக்காக ஊக்குவிக்கப்படுகின்றன. இது பன்னாட்டு வணிகம் மற்றும் முதலீட்டைச் சிதைக்காது (சரத்து 16). இறுதி சரத்து மற்ற கொள்கைகளை நல்ல நம்பிக்கையுடன் நிறைவேற்ற அழைக்கிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rio Declaration on Environment and Development". Encyclopedia of Environment and Society 4. (2007). Thousand Oaks: Sage Publications. 1512–1514. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781412927611. 
  2. UN Documentation Centre, Rio Declaration, Article 1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியோ_பிரகடனம்&oldid=3514776" இலிருந்து மீள்விக்கப்பட்டது