ராஜு பரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜு பரியார்
Raju Pariyar
இயற்பெயர்लोक सम्राट
பிறப்பு30 சூன் 1980 (1980-06-30) (அகவை 43)[1]
பிறப்பிடம்லம்ஜீங், நேபாளம்
இசை வடிவங்கள்நாட்டுப்புற பாரம்பரிய பாடல்கள்
தற்காலப் பாடல்கள்
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இணைந்த செயற்பாடுகள்பிரியா பந்தாரி

ராஜு பரியார் (ஆங்கிலம்: Raju Pariyar; நேபாளி: राजु परियार; பிறப்பு 30 சூன் 1980) நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பாடகர். 2015 ஆம் ஆண்டு வரை 13,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பரியார் பதிவு செய்துள்ளார்.[2]

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பரியார் லம்ஜுங் மாவட்டத்தில் அமைந்துள்ள கௌசஹர் கிராமத்தில் மங்கள் சிங் பரியார் மற்றும் சாந்தா மாயா பரியாருக்கு மகனாகப் பிறந்தார். இவர் 15 ஆஷாத் 2037 (விக்ரம் நாட்காட்டி) அல்லது 30 சூன் 1980-ல் பிறந்தார்.

செப்டம்பர் 2015-ல் காத்மாண்டுவிலிருந்து மும்பை செல்லும் வானூர்தி பயணத்தின்போது பிஷ்ணு பரியாரை (உறவு இல்லை) பரியார் சந்தித்தார். பரத்பூரைச் சேர்ந்த பிஷ்ணு, ஒரு கிறித்தவ போதகர், விமான பயணத்தின் போது பரியாருடன் உரையாடினார். இதன் பின்னர் ஒரு மாதத்திற்குப் பிறகு பரியார் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பரத்பூரில் உள்ள பிஷ்ணுவின் தேவாலயத்திற்குச் சென்று கிறித்துவ மதத்திற்கு மாறினார்கள்.[2]

தொழில்[தொகு]

பரியார் நேபாளத்தில் மிகவும் பிரபலமான பாடகர். பிரியா பண்டாரியுடன் இவர் பாடிய பாடல், யூடியூப்பில் 500,000க்கும் அதிகமான பார்வைகளுடன் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நேபாள பாடல்களில் ஒன்றாகும்.[3] பரியார் அடிக்கடி தனது சொந்த மாவட்டமான லாம்ஜங்கில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.[4]

இசைத்தொகுப்புகள்[தொகு]

இசை[தொகு]

  • பொய்லா ஜன பம் (2008)

பிரபலமான பாடல்கள்[தொகு]

  • லாலுபதே நுக்யோ (2008)
  • ஹத்மா ரடோ ஜோலா (2009)
  • தாகோ ராம்ரோ ரேஷாம் கிராகோ (2009)
  • பாலாபன்லே பாய் பன்யோ (2010)
  • டிம்லாய் சினோ (2011)
  • ஹை பராய் (2011)
  • ஆதி கோலா ஊர்லேரா ஐயோ
  • ஜிம் ஜிம் சானு நஜிம்கௌ பரேலி
  • கங்காஜிகோ பானி
  • பூல் மா மாஹுரி
  • மாஃப் காரா புல் பாயே
  • மிர்மிரேகோ கம்
  • துரா தாடே டேய்
  • தாலி பலயோ தார் மாயா பலினா
  • நயுலி பாரு தாலி மை நிதயோ
  • ருதை ருதை ஜான்ச்சு மேலாம(2009)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepalese Singer Short Biography Video Songs". 13 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017 – via YouTube.
  2. 2.0 2.1 Dorcas Cheng-Tozun (13 October 2015). "'Justin Bieber of Nepal' Converts to Christianity". Christianity Today. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  3. Awale, Sonia (12–18 May 2017). "It's Party Time on the Internet". Nepali Times. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.{{cite web}}: CS1 maint: date format (link)
  4. Gurung, Aash (14 December 2015). "Pariyar lights up Lamjung Mahotsav". The Kathmandu Post. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜு_பரியார்&oldid=3919495" இலிருந்து மீள்விக்கப்பட்டது