ரசுடிகா தகைவிலான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசியாவின் மெலிகோவோவில் ரசுடிகா தகைவிலான்

ரசுடிகா தகைவிலான் (அறிவியல் பெயர்: Hirundo rustica rustica) என்பது தகைவிலானின் துணையினம் ஆகும். இது ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் இனப்பெருக்கம் செய்கிறது.

விளக்கம்[தொகு]

ரசுடிகா தகைவிலானின் உடலின் மேற்பகுதி பளபளக்கும் கருநீல நிறமாக இருக்கும். உடலின் அடிப்பகுதி இளஞ்சிவப்புத் தோய்ந்த வெண்மையாக இருக்கும். நெற்றியும் தொண்டையும் செம்பழுப்பாக இருக்கும். தொண்டையில் உள்ள செம்பழுப்பைச் சுற்றி கருப்பு வளையும் ஒன்று சூழ்ந்திருக்கும். இதன் வால் பிளவு பட்டுள்ளது பறக்கும்போது நன்கு தெரியும்.[1]

பரவலும் வாழிடமும்[தொகு]

ரசுடிகா தகைவிலான் ஐரோப்பா மற்றும் ஆசியாவில், வடக்கே ஆர்க்டிக் வட்டம் வரை, தெற்கே வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சிக்கிம், மற்றும் கிழக்கே ஏநிசை நதி வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா, அறபுத் தீபகற்பம், இந்தியத் துணைக்கண்டம் ஆகிய பகுதிகளுக்கு வலசை வருகின்றன.[2] இவற்றின் வருடாந்திர வலசையின்போது 11,660 கிமீ (7,250 மைல்) தொலைவு வரை பயணிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[3] பொதுவாக செப்டம்பர் இறுதியில் வலசை வரத் தொடங்கி மே மாதத்தில் திரும்புகின்றன. வலசை வரும் காலத்தில் தென்னிந்தியா முழுவதும் நீர் வளம் மிக்கப் பகுதிகளில் காண இயலும்.

நடத்தை[தொகு]

ரசுடிகா தகைவிலான் தரையை ஒட்டித் தாழ்வாகப் பறந்தும், உயரமாக வானத்தில் ஒழுங்கற்ற முறையுல் வட்டம்போட்டு சுற்றிப் பறந்து பறக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். இரவில் நீரில் வளர்ந்துள்ள நாணல் புதர்களில் கூட்டமாக சென்று சேரும். அக்டோபரில் வலசை வந்தவுடனும், ஏப்ரலில் திரும்பிச் செல்லும்போதும் காலை வேளைகளில் மின் கம்பங்களிலும், தொலைபேசிக் கம்பங்களிலும் பெரும் கூட்டமாக அமர்ந்திருப்பதைக் காண இயலும். சிலமுறை இறக்கை அடித்துப் பறந்த பின்னர் மிதந்து பறக்கும். இதற்கு உள்ள நீண்ட வாலானது இது பறக்கும்போது விரைந்து திரும்ப ஏற்றதாக உள்ளது. பறக்கும் பூச்சிகளை இது முதன்மையாக உணவாக கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 344. 
  2. Turner, Angela K; Rose, Chris (1989). Swallows & Martins: An Identification Guide and Handbook. Boston: Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-395-51174-9. https://archive.org/details/swallowsmartinsi00turn.  p164–169
  3. "Bird ringing across the world". EURING Newsletter — Volume 1, November 1996. Euring. Archived from the original on 3 December 2007. பார்க்கப்பட்ட நாள் 1 December 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசுடிகா_தகைவிலான்&oldid=3794347" இலிருந்து மீள்விக்கப்பட்டது