ரங்கநாயகி அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரங்கநாயகி அம்மாள் (Ranganayaki Ammal) (28 மே 1910 - 15 ஆகஸ்ட் 1998) ஒரு இந்திய மிருதங்கக் கலைஞர்.[1] இவர், பாலின தடையை முதன்முதலில் உடைத்தவராகவும், முதல் இந்திய பெண் தாள வாத்தியக்காரராகவும் அறியப்படுகிறார்.[2]

குடும்பம்[தொகு]

ரங்கநாயகி அம்மாளின் தந்தை திருக்கோகர்ணம் சிவராமன் ஒரு சிறந்த நட்டுவானாராகப் புகழ் பெற்றவர். அவதான பல்லவிகளில் அவர் தேர்ச்சி பெற்றதற்காக கொண்டாடப்பட்டவர். இது அவரது கைகளை மட்டுமல்ல, அவரது கால்களையும் தலையையும் பயன்படுத்தி திறமையாக பல தாளங்களை வாசிக்கக்கூடியவர். ஏழு உடன்பிறப்புகளைக் கொண்ட குடும்பத்தில் ரங்கநாயகி அம்மாள் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.[2] இவரது சகோதரர் உலகநாதன் பிள்ளை வயலின் கலைஞர் ஆவார்.[1]

பயிற்சி[தொகு]

ரங்கநாயகி மிருதங்கம் கலையைத் தழுவி, அதில் புகழ்பெற்ற புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையிடம் வழிகாட்டுதலைப் பெற்றார். அதே நேரத்தில் பரதநாட்டியத்தில் தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.[3]

சாதனைகள்[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய கருநாடக இசை தாளக்கலையில், இவர் ஒரு தடம் பதிக்கும் பெண்ணாக ஆனார். 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டில், நிகழ்வில் பங்கேற்ற 23 மிருதங்கக் கலைஞர்களில் 17 வயது திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[2]

ரங்கநாயகி அம்மாள், சிறந்த மிருதங்கம் வாசிப்பாளராக இருந்தார். இவர், இசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்த போதிலும், தமிழ்நாடு அரசின் உயரிய குடிமை விருதான கலைமாமணி விருது பெற்றதைத் தவிர, அதிகம் கவனிக்கப்படாமல் இருந்தார்.

இறப்பு[தொகு]

ரங்கநாயகி அம்மாள் ஆகஸ்ட் 15, 1998 அன்று காலமானார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Little Big World, University of Iowa Press, pp. 61–74, doi:10.2307/j.ctt20mvgcq.8, S2CID 184046960, பார்க்கப்பட்ட நாள் 2023-07-24
  2. 2.0 2.1 2.2 "Ranganayaki Ammal: One of the first women to enter the male-dominated world of percussion" (in en-IN). The Hindu. 2022-06-09. https://www.thehindu.com/entertainment/music/ranganayaki-ammal-one-of-the-first-women-to-enter-the-male-dominated-world-of-percussion/article65510760.ece. 
  3. "Ranganayaki Ammal: One of the first women to enter the male-dominated world of percussion - Bharat Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-10. பார்க்கப்பட்ட நாள் 2023-07-24.
  4. "Times top10". The Times of India. https://timesofindia.indiatimes.com/gender-september-12-2022/newslettertoi/msid-94110592.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கநாயகி_அம்மாள்&oldid=3904480" இலிருந்து மீள்விக்கப்பட்டது