யோகிந்திர ரசுதோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோகேந்திர ரசுதோகி (Yogendra Rastogi) என்பார் வட இந்தியாவின் தலைசிறந்த மிகவும் பிரபலமான நாட்காட்டி கலை ஓவியர்களில் ஒருவர். இந்து தெய்வங்களின் ஓவியங்களுக்காக இவர் புகழ்பெற்றவர். இவரது ஓவிய அரங்கம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட்டில் அமைந்துள்ளது. இவர் ஆகஸ்ட் 29, 2015 அன்று தனது 76 வயதில் காலமானார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ரசுதோகி சுயமாகவே கலைகளை கற்ற கலைஞராக இருந்தார். வறுமை காரணமாக இவரால் கல்வியைத் தொடர முடியவில்லை. போதுமான வண்ணப்பூச்சு அல்லது காகிதத்தை வாங்க நிதி இல்லாத நிலையில், இவர் தனது ஓவியத் திறனை வளர்த்துக் கொண்டார். மூத்த மகனாகவும், குடும்பத்தினை கவனித்துக்கொள்ளும் முயற்சியில் மீரட்டில் அலங்காரம் மற்றும் கைவண்ணங்களை வரைவதற்குத் தொடங்கினார். [2]

இந்திய-சீனா போரின் போது இவர் வரைந்த சிறுவயது இராணுவ வீரன் ஓவியம் இவருக்குப் பெருமை தேடித்தந்தது. புகழ்பெற்ற நன்ஹா முன்னா ரஹி படத்தினையும் இவர் வரைந்தார். ரசுதோகின் அர்ப்பணிப்பான பணியின் காரணமாக இரண்டு அச்சகங்களை நிறுவும் அளவிற்கு முன்னேறினார்.[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]

மேற்கோள்கள்[தொகு]

  1. "धार्मिक कैलेंडर के लिए मशहूर थे ये चित्रकार, जवाहर लाल नेहरू ने भी किया था सम्मानित". 2015-09-02. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  2. Christopher Pinney (2004). 'Photos of the Gods': The Printed Image and Political Struggle in India. Reaktion Books. பக். 167–171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86189-184-6. https://books.google.com/books?id=8hhXq7hpzSwC&pg=PA171. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகிந்திர_ரசுதோகி&oldid=3539694" இலிருந்து மீள்விக்கப்பட்டது