யாழ்ப்பாண விசுவகம்மாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணம் விஸ்வகுலம் எனப்படும் சாதி கொல்லர், தட்டார், கண்ணார், கட்சிப்பர், தச்சர் ஆகிய உட்பிரிவுகளை கொண்டதாகும். இவர்கள் சைவர்கள் ஆவர். தீட்சை எடுத்து பூநூல் அணிவது கட்டாயமாகும். ஆசாரங்களையும், சைவ வழிபாடுகளையும் முறையாகப் பின்பற்றுபவர்கள். திருமணம் தங்களுக்குள்ளும், தங்கள் உட்பிரிவுகளுக்குள்ளும் செய்து கொள்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் தட்டார் தெரு, கன்னாதிட்டி, நல்லூர், பெருமாள்கோவிலடி, நாச்சிமார்கோவிலடி, கேசாவில் பிள்ளையார் கோவிலடி, காளி கோவிலடி, சிவன் கோவிலடி, வண்ணார்பண்ணை, செட்டித்தெரு, சங்கத்தானை போன்ற இடங்கள் இவர்களின் பூர்விகமாகும்.

  • கொல்லர் - இரும்பு சம்பந்தமான வேலை செய்வர்.
  • தட்டார் - தங்கம் சம்பந்தமான வேலை செய்வர்.
  • கண்ணார் - பித்தளை சம்பந்தமான வேலை செய்வர்.
  • கச்சிப்பர் - சிற்பம் சம்பந்தமான வேலை செய்வர்.
  • தச்சர் - மரத்தளவாடங்கள் சம்பந்தமான வேலைசெய்வர்.