யானை வாகனம்
யானை வாகனம் என்பது இந்துக் கோயில்களில் திருவிழாக்களின் பொழுது உற்சவமூர்த்திகள் ஊர்வலத்தில் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாக உள்ளது. இந்து சமயப் புராணங்களின்படி இந்திரனின் வாகனமாக ஐராவதம் யானை உள்ளது. [1] இந்து தொன்மவியலில் யானைகள்[தொகு]ஐராவதம் எனும் வெள்ளை யானை திருமாலிடம் இருந்து தோன்றி, பின் இந்திரனிற்கு வாகனமானதாக கூறப்படுகிறது. உலகினை அட்ட யானைகள் தாங்குவதாக இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளது. இதனை அட்டதிக் கஜங்கள் என்கின்றனர். அதன்படி கிழக்கில் ஐராவதம் என்ற ஆண் யானையும் அதன் பெண் இணையான அப்ரமுவும், தென்கிழக்கில் புண்டரீகனும் கபிலனும், தெற்கில் வாமனனும் பிங்களமும்,தென்மேற்கில் குமுதா, அனுபமாவும் மேற்கில் அஞ்சனா, தாம்ரகர்ணிகாவும், வடமேற்கில் புஷ்பதந்தா, கப்ரதந்தியும் வடக்கில் எபர்வபௌமா, அங்கினாவும் வடகிழக்கில் ஸுப்ரதிகா, அஞ்சனாவதி அல்லது அமரகோசா என்ற யானைகள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வாகன அமைப்பு[தொகு]யானை வாகனமானது மரத்தால் செய்யப்பட்டு, மேற்புரம் உலோகத் தகடுகளால் காப்பும், அழகும் செய்யப்பட்டுகின்றன. யானை நின்றுள்ளது போல வடிவமைக்கப்பட்டு இருக்கும். யானை வாகனத்தின் மீது உற்சவரை அமர்த்த ஏதுவாக தாங்கு பலகைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. நடை[தொகு]இந்து சமய கோயில்களில் யானை வாகனம் உற்சவர் திருவுலா செல்ல பயன்படுத்தப்படுகிறது. சிவாலயங்கள், திருமால் கோயில்கள் மற்றும் அம்மன் கோயில்கள் என எல்லா கோயில்களிலும் யானை வாகனம் பயன்படுத்தப்படுகிறது. சில கோயில்களில் யானை வாகனத்தின் துதிக்கை மூன்று நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. துதிக்கையின் பாகங்கள் வண்ணச் சித்திர துணியால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் வீதியுலாவின் போது யானை துதிக்கை ஆடுவது போல தோன்றும். [2] யானை வாகனத்தில் உள்ள தாங்குபலகையில் உற்சவர் கட்டப்பட்டு வாகனத்தின் முன்புறம் முதலில் தூக்கப்படுகிறது. பிறகு வாகனத்தின் பின்புறம் தூக்கப்படும் இவ்வாறு செய்வது நிஜ யானை எழுவது போல இருக்கும். யானை வாகனத்தினை யானை நடப்பது போல வாகன தாங்கிகள் நடத்துவர். இந்த நடை சாய் நடை என்றும் ஏசல் என்றும் அழைக்கப்படுகிறது. [3] உலா நாட்கள்[தொகு]
படக்காட்சியகம்[தொகு]
இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |