மோசசு மைக்கேல் பாரடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோசசு மைக்கேல் பாரடே என்பவர் தமிழ்க் கவிஞர் ஆவார். 1980 முதலாக பல இதழ்களில் கவிதைகள் படைத்துள்ளார்.

பிறப்பும் இளமையும்[தொகு]

காஞ்சிபுரத்தில், ஜேசுதாஸ் இராமச்சந்திரன்- கிருபாவதிக்கு மகனாகப் பிறந்தவர். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழ்ப் பணிகள்[தொகு]

மதுரையில் 1981 இல் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டிலும், உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவை மாநாட்டிலும் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகள் படைத்துள்ளார். நியூயார்க், கனடா, கோலாலம்பூர், கொழும்பு ஆகிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

  • சிலுவையினடியில் சிந்திய மலர்கள்
  • சிலுவைவழிச் சிந்தனைகள்
  • ஞான நொண்டி நாடகம்
  • ஏட்டில் வடித்த தேன்
  • கிறித்தவத் தமிழியல் ஆய்வுக்கோவை
  • ஒரு கிறித்தவ ஆசிரியர் உருவாகிறார்
  • தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் படைப்புகள்- ஓர் ஆய்வு

முதலான பல நூல்களைப் படைத்துள்ளார்.

விருதுகள்[தொகு]

1986 ஆம் ஆண்டு, உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவையில், அருட்கலைஞர் எனும் விருதையும்,1996 இல் நியூயார்க் தமிழ்க் கிறித்தவக் கோயிலில், தகுதிமிகு சேவையாளர் எனும் பட்டத்தையும்,உலகத் தமிழ்ப் பேரவையில், தமிழ்மாமணி எனும் விருதையும் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]

1) www.Tamil virtual university. com பார்த்த நாள் 19-7-17. 2) ப.முத்துக்குமாரசுவாமி, இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள் பழனியப்பா பிரதர்ஸ். 2004.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசசு_மைக்கேல்_பாரடே&oldid=2716666" இலிருந்து மீள்விக்கப்பட்டது