மைக்ரோசாப்ட் சீக்குவல் வழங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் | |
|---|---|
| உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
| பிந்தைய பதிப்பு | சீக்குவல் சர்வர் 2008 / ஆகஸ்ட் 6 2008 |
| இயக்குதளம் | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
| வகை | தொடர்புடைய தரவுத் தள முகாமைத்துவம்RDBMS |
| அனுமதி | மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம் |
| இணையத்தளம் | www.microsoft.com/sqlserver |
மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் மைக்ரோசாப்ட்டினால் விருத்தி செய்யப்பட்ட தொடர்புடைய தரவுத் தள முகாமைத்துவ மென்பொருள் ஆகும். இதன் பிரதான வினவல் மொழியாவன டீ-சீக்குவல், எண்டிட்டி சீக்குவல், ஆன்சி சீக்குவல் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
| பதிப்பு | தேதி/வருடம் | வெளியீட்டுப் பெயர் | சூட்சுமப் பெயர் |
|---|---|---|---|
| 1.0 (OS/2) |
1989 | சீக்குவல் சர்வர் 1.0 | - |
| 4.2 |
அக்டோபர் 1992 | சீக்வல் சர்வர் 4.2 | - |
| 4.21 (WinNT) |
1993 | சீக்குவல் சர்வர் 4.21 | - |
| 6.0 | 1995 | சீக்குவல் சர்வர் 6.0 | SQL95 |
| 6.5 | 1996 | சீக்குவல் சர்வர் 6.5 | ஹைட்ரா (Hydra) |
| 7.0 | 1998 | சீக்குவல் சர்வர் 7.0 | ஸ்பினிக்ஸ் (Sphinx) |
| - | 1999 | சீக்குவல் சர்வர் 7.0 OLAP Tools |
பிளேட்டோ (Plato) |
| 8.0 | 2000 | சீக்குவல் சர்வர் 2000 | Shiloh |
| 8.0 | 2003 | சீக்குவல் சர்வர் 2000 64-பிட் பதிப்பு |
லிபேட்டி (Liberty) |
| 9.0 | 2005 | சீக்குவல் சர்வர் 2005 | யுகொன் (Yukon) |
| 10.0 | 2008 | சீக்குவல் சர்வர் 2008 | கட்மாய் |
மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வரின் 7.0 இற்கு முந்தைய பதிப்பானது சைபேசு சீக்குவல் சர்வரினைப் பின்பற்றியதாகும். ஆரம்பத்தில் எண்டபிறைஸ் தரவுத் தளங்களை உருவாக்கிய ஆரக்கிள் ஐபிஎம் உடன் போட்டியிடவும் பின்னர் சைபேசு உடனும் போட்டியிடும் வண்ணம் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் வளர்ச்சியடைந்தது. ஏறத்தாழ 1989 இல் சைபேசு ஆஷன்-டேட் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து ஓஎஸ்/2 இயங்குதளத்திற்கான முதலாவது தரவுத்தளமான சீக்குவல் சர்வர் 1.0 இனை உருவாக்கினர். இது யுனிக்ஸ் விஎம்எஸ் இயங்குதளத்திற்கான சைபேசுவின் சீக்குவல் சர்வரினை ஒத்திருந்தது. 1992 இல் மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 4.21 வெளிவந்தது இது மைக்ரோசாப்ட் ஓஎஸ்/2 இயங்குதளத்தில் 1.3 ஆம் பதிப்புடன் சேர்த்து விநியோகிக்கப்பட்டது. பின்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எண்டி 3.1 இற்கான சீக்குவல் சர்வர் 4.1 ஐ வெளிவிட்டது. மைக்ரோசாப்ட் சீக்குவல் சர்வர் 6.0 முதன்முதலாக சைபேசுவின் எந்த வழிகாட்டலும் இன்றி தனியே மைக்ரோசாப்ட்டினால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
விண்டோஸ் எண்டி வெளிவந்த காலப்பகுதியில் சைபேசுவும் மைக்ரோசாப்டும் தனித்தனியே தமக்கான பாணியில் வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தலை மேற்கொண்டிருந்தனர். மைக்ரோசாப்ட் விண்டோஸ் எண்டி இயங்குதளங்களிற்கான சீக்குவல் சர்வரின் முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள முயன்றது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக சைபேசு அவர்களது தரவுத் தளத்திற்கு அடப்டிவ் சர்வர் எண்டபிறைஸ் என்றவாறு பெயர்மாற்றிக் கொண்டனர். 1994 ஆம் ஆண்டுவரை மைக்ரோசாப்டின் சீக்குவல் சர்வரின் நிறுவலானது மூன்று சைபேசுவின் பதிப்புரிமைக் குறிப்புக்களைக் கொண்டிந்தது.
சீக்குவல் சர்வர் 7.0 முதன்முதலாக சைபேசுவின் நிரலாக்கம் இன்றி மீளவும் மைரோசாப்டினால் உருவாகப்பட்ட மூலநிரல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இதுவே முதலாவது வரைகலை இடைமுகத் தரவுத் தளமும் ஆகும். இதே பாணியை சீக்குவல் சர்வர் 2000 பிந்தொடர்ந்தது. சீக்குவல் சர்வர் 2000 முதன்முதலாக இண்டெல் ஐடானியம் 64பிட் பதிப்பினை ஆதரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது.
8 வருடங்களாக இதன் முன்னைய பதிப்புக்களை (சீக்குவல் சர்வர் 2000) விட வினைத்திறனாக, ஒருங்கிணைந்த விருத்திச் சூழல் உள்ளதாக சீக்குவல் சர்வர் 2005 உருவாக்கப்பட்டது.
[தொகு] சீக்குவல் சர்வர் 2005
சீக்குவல் சர்வர் 2000 இன் வழிவந்த சீக்வல் சர்வர் 2005 அக்டோபர் 2005 இல் வெளிவந்தது. இது நேரடியாகவே எக்ஸ் எம் எல் தரவுகளைக் கையாளும் வசதியைக் கொண்டிருந்தது.
[தொகு] மென்பொருட்தேவைகள்
[தொகு] இயங்குதளத் தேவைகள்
- விண்டோஸ் சர்வர் 2003 (ஸ்ராண்டட், எண்டபிறைஸ், டேட்டா சென்டர், எம்பெடட்).
- விண்டோஸ் சர்வர் 2003 வெப் எடிசன்
- விண்டோஸ் எக்ஸ்பி ஹோம், புரொபெஷனல், மீடியா செண்டர் மற்றும் எம்பெடட் சேவைப் பொதி 1 உம் அதற்கு மேற்பட்டதும்.
- விண்டோஸ் 2000 புரொபெஷனல், சர்வர், அட்வான்ஸ் சர்வர், டேட்டா செண்டர் சேவைப் பொதி 4.
[தொகு] ஏனைய மென்பொருட்கள்
- இண்டநெட் எக்ஸ்புளோளர் 6 சேவைப் பொதி 1 உம் அதற்கு மேலும்.
- இண்டநெட் இன்பமேஷன் சர்வீசஸ் உம் அதற்கு மேற்பட்டதும்.
- மைக்ரோசாப்ட் டாட்.நெட் 2.0 சட்டம் (framework)