மே. சி. தூயமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மே. சி. தூயமணி (M. C. Thooyamani)(பிறப்பு 17 செப்டம்பர் 1937) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு குடியிருப்பு பகுதியினைச் சார்ந்தவர். பள்ளிக் கல்வியினை மேட்டுப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். தூயமணி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 மேட்டுப்பாளையம் திமுக 39,013 56.08[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 452. 
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மே._சி._தூயமணி&oldid=3479337" இலிருந்து மீள்விக்கப்பட்டது