மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முகாமைத்துவம் (தமிழக வழக்கு - மேலாண்மை, management) எனும் பதம் ஊழியர்களைக் கொண்டு அமைப்பொன்றினது (குறிப்பாக வணிகத்துறை) சகல வளங்களையும் பயனுறுதிமிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச்செல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை விபரிக்கும். The term "management" characterizes the process of and/or the personnel leading and directing all or part of an organization (often a business) through the deployment and manipulation of resources (human, financial, material, intellectual or intangible).

அமைப்பொன்றில் இந்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் முகாமையாளர் (manager) எனப்படுவார். இங்கு வளங்கள் எனப்படுவது அமைப்பொன்றில் காணப்படும் மனிதவளம்,நிதி வளம்,பொருண்மை வளம்,புலமைசார் வளம்,கட்புலனாகா வளம் என்பவற்றினை வகைக்குறிக்கும்.

வணிக முகாமைத்துவம்[தொகு]

மேரி பார்க்கர் ஃபாலட் (Mary Parker Follet) (1868-1933), என்பவரே முகாமைத்துவத்திற்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவார். இவரின் கருத்தின்படி முகாமைத்துவம் என்பது "ஊழியர்களை கொண்டு கருமங்கள் ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும்" ("the art of getting things done through people"). இவரை தொடர்ந்து பலரும் முகாமைத்துவத்திற்கு பலவித வரைவிலக்கணத்தினை அளித்துள்ளனர்.இறுதியாக "முகாமையாளர் என்ன செய்கின்றாரோ அதுவே முகாமைத்துவம்" என பொருள்படுத்தியுள்ளனர். இவற்றுக்கு காரணம் நிகழுலகில் முகாமைத்துவம் வளர்ந்துவரும் ஒரு துறையாக இருப்பது, முகாமைத்துவம் மட்டங்களுக்கிடையான ஆற்றப்படும் கருமங்களில் வேறுபாடு இருப்பதும் ஆகும்.

பொதுவாக நடைமுறையினில் நிருவாகமும் (administration) முகாமைத்துவமும் ஒரே கருத்தினில் புழங்கப்படுகின்றது,ஆயினும் நிருவாகம் என்பது உண்மையில் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒர் பணியாகும் [சான்று தேவை].

வரைவிலக்கணம்[தொகு]

ஒரு செயலை அல்லது பணியை பிறநபர்கள் மூலமாக செய்து முடிக்கப்பெறுவது மேலாண்மை (Management) என மேரி பாலெட் (Mary Follett: 1868-1933) குறிப்பிடுகிறார். மேலாளர்கள் (Managers) ஒரு வேலையை அல்லது பணியை தாமே செய்வதில்லை மாறாக அவர்கள் அந்த பணியை யார் சிறப்பாக செய்ய முடியும் என்பதை முடிவு செய்து அவர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவ்வாறு ஒப்படைப்பு பெற்ற நபரே அந்த பணியை செய்து முடிக்கிறார். மேலாளரை பொறுத்தவரை அந்த வேலை உரிய முறையில் செய்து முடிக்கப்படுகிறது.

மேரி பாலெட்டின் வரைவிலக்கணத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தான் எழுதிய திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளின் பெருமை உலகம் அறிந்திராத காரணத்தினால் இதுபோன்ற வரைவிலக்கணங்களையே நாம் கல்வி நிலையங்களில் பயன்படுத்தி வந்துள்ளோம் . அந்த நிலை இன்றளவும் மாறவில்லை என்பது உண்மையும் கூட.

திருக்குறள் மட்டுமின்றி அக்குறள் அடங்கியுள்ள அதிகராத்தின தலைப்பே மேலாண்மை என்றால் என்ன எனப்தை விளக்குகிறது எனபது திருக்குறளின் தனிச்சிறப்பு.

மேலாண்மை யை விளக்கும் அந்த குறள்:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

என்பதாகும்.

இக்குறள் தெரிந்துவினையாடல் என்ற அதிகாரத்தில் உள்ளது.

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது திரு மு.வரதராசனார் உரையாகும்.

இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக எனபது திரு.பரிமேலழகர் உரையாகும்.

இரண்டு உரையாசிரியர்களும் ”இதனால்” என்பதற்க்கு கருவியை மட்டுமே பொருளாக கூறுகின்றனர். ”இதனால்” என்பதற்கு கருவி மட்டுமே பொருளன்று. இதற்க்கு ”...இன்ன காரணத்தினால்” என்றும் பெருள் கொள்ள முடியும். ஒரு செயலை ஒருவரிடம் ஒப்படைக்க கருவி மட்டுமே முடிவெடுக்கும் அளவு கோளாக அமைய முடியாது. அந்த செயலை செயல்படுத்த சரியான நபரை அவரின் தகுதிறிந்து அல்லது சூழலறிந்து பணியை ஒப்படைப்பு செய்ய்ப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது என்பதை அறியலாம்.

இக்குறளில் உள்ள அணைத்து கருத்துகளையும் அடங்கியது ”தெரிந்துவினையாடல்” என்ற செற்பதமாகும். எனவே மேலாண்மைக்கு தெரிந்துவினையாடல் என்பது பொருள் பொதிந்த விளக்கமாக அமைகிறது.

முகாமைத்துவ கருமங்கள்[தொகு]

நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும். ஹென்றி பயோலின் (Henri Fayol) கருத்துப்படி:

  1. planning - திட்டமிடல்

எந்த செயலைச் செய்தாலும் செய்யத்தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது , அதற்கான வளங்களை எங்கிருந்து பெறுவது பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பன பற்றியெல்லாம் முன்பே திட்டமிடுதல் அவசியம்.

  1. organizing - ஒழுங்கமைத்தல்

திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் (நிதி, மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள்) திரட்டுதல்.

  1. commanding - ஆணையிடுதல்
  1. co-ordinating - இயைபாக்கல்

எந்த எந்தப் பணிகளை யார் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்தல்.இதனால் ஒரே பணியை இருவர் செய்வது அல்லது ஒரு பணியை யாருமே செய்யாமல் விட்டுவிடுவது போன்றவை தவிர்க்கப் படுகின்றன.

  1. controlling - கட்டுப்படுத்தல் என்பன முகாமைத்துவ கருமங்களாகும்.

திட்டமிட்டப் பணிகளை ஒரு குறிப்பிட்ட பாதையில் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்துகையில் பாதையில் இருந்து யாரேனும் அல்லது ஒரு சில பணிகளோ வழுவுவதாகத் தோன்றினால் அவற்றை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செலுத்துவது கட்டுப் படுத்துதல் எனப்படும்.

இதை அவர் POCCC என்ற குறியீடாக சுருக்கி விளக்குகிறார்.Fayol#cite note-2

இவை தவிர ஊக்கப்படுத்தல் (motivation),நெறிப்படுத்தல் (directing),ஊழியரிடல் (staffing) போற்றவையும் முகாமைத்துவ கருமங்களாகக் கொள்ளப்படும்.

மேலாண்மை குறித்த பதினான்கு தத்துவங்கள்[தொகு]

அறிவியல் அடிப்படையிலான மேலாண்மை - Scientific Management)[தொகு]

முகாமைத்துவ செயற்பரப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேலாண்மை&oldid=1528190" இருந்து மீள்விக்கப்பட்டது