உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்திலீன்பிசு (இருபியூட்டைல்யிருதயோகார்பமேட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்திலீன்பிசு (இருபியூட்டைல்யிருதயோகார்பமேட்டு)
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெத்திலீன் டைபியூட்டைல்டைதயோகார்பமேட்டு
இனங்காட்டிகள்
10254-57-6
பப்கெம் 82496
பண்புகள்
C19H38N2S4
வாய்ப்பாட்டு எடை 422.77 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மெத்திலீன்பிசு (இருபியூட்டைல்யிருதயோகார்பமேட்டு) (Methylenebis(dibutyldithiocarbamate)) என்பது CH2(SC(S)NBu2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள Bu = C4H9 தொகுதியாகும். மேலும், இதுவொரு கரிமக்கந்தகச் சேர்மமாகவும் கருதப்படுகிறது. மெத்திலீன்பிசு (டைபியூட்டைல்டைதயோகார்பமேட்டு) என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். டைபியூட்டைல்டைதயோகார்பமேட்டு சேர்மத்தின் வழிப்பெறுதியாக இதை தயாரிக்கிறார்கள். ஆக்சிசனேற்ற எதிர்ப்பியாகவும் உலோகப் மேற்பரப்புகளை பாதுகாக்கும் பொருளாகவும் பல்வேறு உயவுப்பொருட்களுடன் கூட்டுசேர் பொருளாக மெத்திலீன்பிசு (இருபியூட்டைல்யிருதயோகார்பமேட்டு) பயன்படுத்தப்படுகிறது[1]. இருதயோகார்பமேட்டுடன் இருகுளோரோமீத்தேன் சேர்த்து ஆல்க்கைலேற்ற வினைக்கு உட்படுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது[2]. நிறம் கொண்டிருப்பதாக வரையறுக்கப்பட்டாலும் எளிய இருதயோகார்பமேட்டுகளின் எசுத்தர்கள் நிறமற்று காணப்படுகின்றன[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lubricants, 2. Components". Ullmanns Encyclopedia of Industrial Chemistry. (2011). Wiley-VCH. DOI:10.1002/14356007.o15_o04. 
  2. Cespedes, Carlos; Vega, Juan C. (1994). "Reactions of Dichloromethane with Thioanions. 1. Preparation of Bis(N,N-dialkylthiocarbamoylthio)methanes". Phosphorus, Sulfur and Silicon and the Related Elements 90: 155-8. doi:10.1080/10426509408016397. 
  3. John R. Grunwell (1970). "Reaction of Grignard reagents with tetramethylthiuram disulfide [yielding dithiocarbamates]". J. Org. Chem. 35: 1500–1501. doi:10.1021/jo00830a052.