மெத்திலமோனியம் ஆலைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
[CH3NH3]I தூள்r

மெத்திலமோனியம் ஆலைடுகள் (Methylammonium halide) என்பவை [CH3NH3]+X என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம ஆலைடுகளாகும், இங்குள்ள X என்பது மெத்திலாமோனியம் புளோரைடுக்கு F ஆகவும், மெத்திலமோனியம் குளோரைடுக்கு Cl ஆகவும், மெத்திலமோனியம் புரோமைடுக்கு Br ஆகவும் மெத்திலமோனியம் அயோடைடுக்கு I ஆகவும் குறியீடுகள் இடம்பெறும். பொதுவாக இவை வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் தூளாக காணப்படுகின்றன.

பயன்பாடுகள்[தொகு]

மெத்திலமோனியம் ஆலைடு உப்புகள் பெரோவ்சுஸ்கைட்டு சூரிய மின்கலங்களின் பகுதி கூறுகளாகும். இவை வணிகமயமாக்கலுக்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன.[1] அயோடைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு அம்மோனியம் ஆலைடுகளின் அடிப்படையில் காந்த-ஒளியியல் தரவு சேமிப்பக கருத்துருக்கள் சோதிக்கப்படுகின்றன.[2]

தயாரிப்பு[தொகு]

மெத்திலமோனியம் ஆலைடு சேர்மங்கள் பொதுவாக சமமான அளவு மெத்திலமீனை பொருத்தமான ஆலைடு அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மெத்திலமோனியம் அயோடைடு 0 °C இல் மெத்திலமீனுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்து 120 நிமிடங்களுக்கு வினைபுரியச் செய்து 60 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆவியாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[3]

CH3NH2 + HI → [CH3NH3]I

படிகவியல்[தொகு]

மெத்திலமோனியம் ஆலைடுகளின் படிகவியல் மிகவும் ஆய்வுக்கு உட்பட்டதாகும். இயே.எசு. எண்டிரிக்சு 1928 ஆம் ஆண்டில் இவை பற்றிய ஆரம்பகால கட்டுரையை வெளியிட்டார்.[4] மெத்திலமோனியம் குளோரைடு மீண்டும் 1946 ஆம் ஆண்டிலும்[5] 1961 ஆம் ஆண்டில் மெத்திலமோனியம் புரோமைடும் ஆய்வு செய்யப்பட்டன.[6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Li, Hangqian. (2016). "A modified sequential deposition method for fabrication of perovskite solar cells". Solar Energy 126: 243–251. doi:10.1016/j.solener.2015.12.045. Bibcode: 2016SoEn..126..243L. 
  2. Náfrádi, Bálint (24 November 2016). "Optically switched magnetism in photovoltaic perovskite CH3NH3(Mn:Pb)I3". Nature Communications 7: 13406. doi:10.1038/ncomms13406. பப்மெட்:27882917. Bibcode: 2016NatCo...713406N. 
  3. Qiu, Jianhang; Qiu, Yongcai; Yan, Keyou; Zhong, Min; Mu, Cheng; Yan, He; Yang, Shihe (2013), "All-solid-state hybrid solar cells based on a new organometal halide perovskite sensitizer and one-dimensional TiO2 nanowire arrays", Nanoscale, 5 (8): 3245–3248, Bibcode:2013Nanos...5.3245Q, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/C3NR00218G, PMID 23508213
  4. Hendricks, J.S. (1928), "The crystal structures of the monomethyl ammonium halides", Z. Kristallogr., 67 (1): 106–118, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1524/zkri.1928.67.1.106, S2CID 101288454
  5. Hughes, Edward W.; Lipscomb, William N. (1946), "The Crystal Structure of Methylammonium Chloride", J. Am. Chem. Soc., 68 (10): 1970–1975, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ja01214a029
  6. Gabe, E.J. (1961), "The crystal structure of methylammonium bromide", Acta Crystallogr., 14 (12): 1296, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1107/S0365110X6100382X
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்திலமோனியம்_ஆலைடு&oldid=3815928" இலிருந்து மீள்விக்கப்பட்டது