மூன்றாவது ஆங்கில மைசூர் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மூன்றாவது ஆங்கில-மைசூர் போர் Third Anglo-Mysore War |
|||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆங்கில-மைசூர் போர்கள் பகுதி | |||||||||
போர் நடந்த இடங்களின் வரைபடம் |
|||||||||
|
|||||||||
| பிரிவினர் | |||||||||
| தளபதிகள் | |||||||||
| திப்பு சுல்தான் | |||||||||
மூன்றாவது ஆங்கில மைசூர் போர் (Third Anglo-Mysore War) 1789–92 காலகட்டத்தில் தென் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் பேரரசு மற்றும் பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனத்தின் தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் மராட்டியப் பேரரசும் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்ததித்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது.