மும்தாசு மகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மும்தாஜ் மகால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மும்தாஜ் மகால்
தாஜ்மகால்

மும்தாஜ் மகால் (பார்சிய மொழி:ممتاز محل) தாஜ்மகாலை உருவாக்கிய முகலாயப் பேரரசு மன்னனான ஷாஜகானின் மனைவி ஆவார். இவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், ஏப்ரல் 1593இல் இந்தியாவில் ஆக்ராவில் பிறந்தவர். இவரது தந்தை பார்சி இனத்தவரான அப்துல் அசன் அசாஃப் கான் ஜகாங்கீர் மன்னரின் மனைவியான நூர் ஜகானின் சகோதரர் ஆவார்.

மும்தாஜ் தனது 19வது வயதில் மே 10, 1612இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். இவர் பின்னர் முகாலாயப் பேரரசின் மன்னனாகி ஷா ஜகான் என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் இம்மன்னனுக்கு இரண்டாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தாள். இவள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூரில் தனது 14வது மகப்பேறின் போது மரணமானாள். இவளது உடல் தாஜ்மகாலில் அடக்கம் செய்யப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மும்தாசு_மகால்&oldid=1699813" இருந்து மீள்விக்கப்பட்டது