முன்முடிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒன்றை நோக்கி தகுந்த விபரங்களை அறியும் முன்னர் அதை நோக்கி வரையப்படும் மதிப்பீடுகள் அல்லது முடிவுகள் முன்முடிவு எனப்படுகிறது.[1] பல சந்தர்ப்பங்களில் முன்முடிவு அதை நோக்கி தப்பெண்ணங்களை உருவாக்க உந்துகிறது. குறிப்பாக இனங்களும், அவர்களின் பண்புகள் நோக்கியும் எடுக்கப்படும் முன்முடிவுகள் பாதகமாக அமைகின்றன.
தமிழில் முன்முடிவை பாரபட்சம், ஓரவஞ்சனை, தப்பெண்ணம் என்றும் குறிப்பிடுவர்.