முதுகுடி மன்னர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதுகுடி மன்னர்கள் சங்ககாலத்தில் முதுகுடிநாடு என்னும் பகுதியை ஆண்ட மன்னர்கள் ஆவர். பாண்டியன் நாட்டில் இருந்த நூறு உட்பிரிவுகளில் 'முதுகுடிநாடு' என்பதும் ஒன்று. தற்போதைய எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதி முதுகுடி நாடு என்று அழைக்கப்பட்டது. சங்ககாலத்தில் முதுகுடி என்றும் பாண்டியர் ஆட்சி காலத்தில் முன்குடி, முதுகுடி என்றும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் எட்டயபுரம் என்றும், இளசை எனவும் மாறி உள்ளது.[1] இந்த குழு நிலப்பகுதியின் தலைநகரமாக இளம்பூவனம் என்ற ஊர் இருந்துள்ளது[2].இது இன்றும் எட்டயபுரம் -கோயில்பட்டி சாலையில் ஒரு சிற்றூராக உள்ளது.

சங்கஇலக்கியத்தில் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர்கள் 'முதுகுடி மன்னர்கள்' என்றும் 'முதுகுடி மறவர்கள்' என்றும் புகழப்படுகின்றனர்.[3] மறவர் இனக் குழுவினரான அகதா என்னும் பிரிவினர் இப்பகுதியை ஆண்ட தற்கான வரலாற்றுச் சாசனங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. கழுகுமலை கல்வெட்டுகள் "ஸ்ரீமுங்குடிநாட்டு ஆணனூர் விலங்காநெறி ஆயினநன்னன் கொற்றன்செய்வித்ததிருமேனி” -எனவும், “ஸ்ரீமுங்குடிநாட்டு சிற்றெயிற்குடி புரவுவரி நாயகன் நானூற் சாத்தி செய்வித்த திருமேனி ” -எனவும், “ஸ்ரீபெருவளத்துக் குட்டியைச் சாத்தி முங்குடி நாட்டுக்கோன் செயல் ” -எனவும், “ஸ்ரீஆணனூர் சிங்கணந்திக்குரவடிகள் மாணாக்கர் நாகநந்திக்குரவடிகள் செய்வித்த திருமேனி ” -எனவும், காணப்படுகிறது.
  2. தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி வட்டம், கடம்பூர் அருகிலுள்ள இளவேலங்கால் பேச்சியம்மன் கோயில் திடலில் உள்ள ஆதீண்டுக்குற்றிக் கல்தூணில் காணப்படும் 13அல்லது 14ம் நூற்றாண்டு தமிழ்கல்வெட்டில், “முதுகுடிநாட்டு இளம்பனமான ராசபுரந்தர நல்லூர் திருவாய்ப் பாடிகளில் குறுமன் குப்பையான மறக்குல மாணிக்க நாடாள்வான் தன்தது” -{வரலாறு ஆய்விதழ்6:20} என்று பொறிக்கப்பட்ட வாசகம் காணப்படுகிறது.
  3. திரு. செ.மா. கணபதி ‘சங்ககால மறவர்’ - 171ம் பக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகுடி_மன்னர்கள்&oldid=3052823" இலிருந்து மீள்விக்கப்பட்டது