முட்டாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முட்டாசு என்பது தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் உள்ளிட்ட தென் தமிழகத்தில் மிகவும் பிரபலம் வாய்ந்த இனிப்பு ஆகும்.[1] இம்மாவட்டத்திலுள்ள தேநீர்க் கடைகளில் இந்த இனிப்பு கிடைக்கும். இது தேன்குழல் முறுக்கு போன்று காணப்பட்டாலும், சுவையால் இது வேறுபட்டது.

முட்டாசு புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்து முதலான பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் ஒன்றாக அரைக்கவேண்டும். பாத்திரம் ஒன்றில் கருப்பட்டியினை நன்கு பாகு பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்தெடுத்த மாவினை எண்ணெய்ச் சட்டியில் சூடான காய்ச்சிய எண்ணெய்யில் முறுக்கு போன்று வார்த்து வறுத்தெடுத்து வறுத்த முட்டாசினை காய்ச்சிய கருப்பட்டி பாகில் இட்டு 10 நிமிடங்கள் கழித்து உண்ணலாம். சுக்கு, மிளகு சேர்த்துக் காய்ச்சிய கருப்பட்டிப் பாகின் சுவையினை அதிகரிக்கலாம்.[2]

புகழ்[தொகு]

முட்டாசின் சுவை குறித்து அர்ஜீன் நடித்த முதல்வன் படப்பாடலான அழகனா ராட்சசியேயில் “முட்டாசு” வார்த்தையிலே என்ற வரிகள் மூலம் அறியலாம்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/15/sathur-sivakasi-famous-jaggery-candy-2808415.html
  2. "”முட்டாசு” சுவைத்து பட்டாசு வெடிக்கலாம்" (in தமிழ்). தின மலர் (தஞ்சாவூர்) 73 (68): 10. நவம்பர் 12. 12.11.2023. 
  3. https://deeplyrics.in/song/ta/azhagana-ratchashiyae
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டாசு&oldid=3826130" இலிருந்து மீள்விக்கப்பட்டது