மிதாலி முகர்ஜி (ஊடகவியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிதாலி முகர்ஜி
பிறப்பு6 திசம்பர் 1979 (1979-12-06) (அகவை 44)
அம்பாலா, அரியானா, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய மக்கள் செய்தித் தொடர்பு நிறுவனம்
பணிஊடகவியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது வரை
வலைத்தளம்
mitalimukherjee.com

மிதாலி முகர்ஜி (Mitali Mukherjee) (பிறப்பு 6 டிசம்பர் 1979) ஓர் இந்திய செய்தி தொகுப்பாளரும், நிதி ஊடகவியலாளரும், எழுத்தாளரும், டெட் பேச்சாளரும் ஆவார்.[1] இவர் செய்தி ஆசிரியராகவும் சிஎன்பிசி தொலைக்காட்சி 18இன் முக்கிய தொகுப்பாளரும் ஆவார்.[2] [3] இவர் முன்பு டிவி டுடே குழு, பிபிசி வேர்ல்ட் மற்றும் தூர்தர்ஷனுடன் இருந்தார். இவர் மின்ட், உலக வங்கி, இந்தியன் எக்சுபிரசு ஆகியவற்றுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.[4] [5] தற்போது, இவர் தி வயரில் பணியாற்றுகிறார்.[6] [7] [8]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மிதாலி, அரியானாவின் அம்பாலாவில் பிறந்தார். இவர் புது தில்லியில் உள்ள இராணுவ பொதுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[2] பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். தனது முதுகலை பட்டப்படிப்பிற்காக, தகவல் தொடர்பு & ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்திய தகவல் தொடர்பு நிறுவனத்திற்கு சென்றார். அங்கு இவர் தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு இதழில் நிபுணத்துவம் பெற்றார்.[9] இவர் ஸ்டார் தொலைக்காட்சியின் உதவித்தொகையைப் பெற்றார். தங்கப் பதக்கமும் பெற்றார். மிக சமீபத்தில், மும்பை எஸ்என்டிடி பல்கலைக்கழகத்தில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுடன் பணிபுரிவதற்கான ஒரு படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றார். இதில் ஏ+பெற்றார்.[10]

தொழில்[தொகு]

மிதாலி ஒரு துணை தயாரிப்பாளராக, மிடிடெக் என்ற நிறுவனத்தில் 2001 இல் தனது பணியைத் தொடங்கினார். அங்கு இவர் பிபிசி உலகத்திற்கான 'கமாண்டோ' உட்பட பல ஆவணப்படங்களுக்காக எழுதி தொகுத்துள்ளார்.

2002ஆம் ஆண்டில், இவர் நாட்டின் செய்தி ஒளிபரப்பு அலைவரிசையான 'தூர்தர்ஷ'னில் சேர்ந்தார். அங்கு இவர் மாலை நேர முக்கிய செய்திகளை தொகுத்து வழங்கினார். 2003ஆம் ஆண்டில், இவர் 'டிவி டுடே'வின் முதன்மை ஆங்கில செய்தி அலைவரிசையான 'ஹெட்லைன்ஸ் டுடே'வில் சேர்ந்தார். இங்கு இவர் அவர் மாலை நேர செய்திகளைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஜம்மு & காஷ்மீர் போன்ற சண்டையால் இவரது ஆர்வம் இருந்தது.

2004 முதல், மிதாலி 'சிஎன்பிசி தொலைக்காட்சி 18' இல் சந்தைப்படுத்துதல் மற்றும் செய்தி ஆசிரியராக இருந்தார். அங்கு இவர் முதன்மை நிகழ்ச்சியான பஜார், பிசினஸ் லன்ச் அனட் குலோசிங் பெல் ஆகியவற்றை தொகுத்து வழங்கினார். பின்னர் 2014இல் அங்கிருந்து வெளியேறினார்.[11]

நிதி முதலீடு ஆலோசனை[தொகு]

2016 ஆம் ஆண்டில், இவர் MoneyMile [12] [13] என்ற ஒரு இணை மின்னணு நிகழ்படத் தளத்தை நிறுவினார். இதில் நிதி முதலீட்டு ஆலோசனையைப் பகிர்ந்து கொள்வது, பெண்கள் நிதி ரீதியாக சுதந்திரமாகவும் அதிகாரம் பெறவும் உதவுவது போன்றவற்றில் இவரது முக்கிய கவனம் இருந்தது. இவர் விக்ரம் சந்திரா என்பவரால் தொடங்கப்பட்ட மின்னணு செய்தித் தளமான எடிட்டர்ஜியில் ஆலோசனை வணிக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு இவர் 2019ஆம் ஆண்டின் முக்கிய பொதுத் தேர்தல்கள், 2019 பிப்ரவரியில் இடைக்கால வரவு செலவு அறிக்கை, சூலை 2019 இல் வரவு செலவு அறிக்கை ஆகியவற்றை தொகுத்து வழங்கினார்.

மிதாலி பெண்களுக்கான நிதி சுதந்திரத்தின் குரல் ஆதரவாளராக இருக்கிறார்.[14] [15] இவரது பல நிகழ்ச்சிகள் இந்த தலைப்பை உள்ளடக்கி யிருக்கிறது. மேலும், பாலின சமத்துவம் குறித்த பல கூட்டங்களிலும் இவர் பேசியுள்ளார். [16] [17] [18]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mitali Mukherjee, Consulting Business Editor at Editorji Technologies
  2. 2.0 2.1 SBS Bangla: More than 70 percent of the workforce in Indian journalism would be women
  3. CNBCTV18: Watch: This day 12 years ago, Sensex welcomed UPA 2 by hitting double upper circuits
  4. TEDxSIULavale: x = independently organized TED event
  5. Mint: Budget 2021 – Getting India back on the growth track
  6. The WIRE: Mitali Mukherjee
  7. SciencesPo, Prof. Philippe Martin
  8. Mitali Mukherjee Shares Her Experience On Covid 2.0 MSN.
  9. The Evolving Assets, TED.
  10. "Australia India Youth Dialogue". Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24.
  11. Udayan's bull run reaches exhaustion point, Business Standard.
  12. TakeCharge Of Your Finances With The MoneyMile, Sheroes.
  13. Firstpost Ropes In Vivek Law And Mitali Mukherjee For Its Budget 2018 Show, Media Infoline.
  14. Women's Power summit on March 7, The Hindu.
  15. A push for change, The Hindu.
  16. Centre for Economic Data and Analysis, Covid Impact: Why Are Women Being Left Behind in the Vaccination Campaign?.
  17. Economic Policy – the Gender Bend, The Indian Express.
  18. Women are paid less. Yes, this is old news, The Indian Express.