மாவிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவிலன் சமூகத்தவர் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலுள்ள ஒரு பட்டியல் பழங்குடியினர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் கேரளத்தின் கண்ணூர், காசரகோடு மாவட்டம் ஆகியவற்றின் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் மரபு வழியாக வேட்டையாடிச் சேர்த்து உண்போராகவும் இடமாற்று விவசாயம் செய்வோராகவும் இருந்தனர். காட்டுப் பகுதிகளிலுள்ள சட்டதிட்டங்களாலும் பழங்குடியினரல்லாதோர் ஊடுருவலாலும் அண்மைக் காலங்களில் அவர்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டுள்ளது.[1]

மங்களம் களி என்பது அப்பழங்குடியினரின் ஒரு நடனம் ஆகும்.[2] தெய்யம் என்பதும் அத்தகையதே.[3]

References[தொகு]

  1. Suresh, K. P. (2010). "Indigenous Agricultural Practices among Mavilan Tribe in North Kerala". Studies of Tribes and Tribals 8 (2): 103-106. doi:10.1080/0972639X.2010.11886616. 
  2. "Tribal art with the fusion touch". The Hindu. 26 August 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Tribal-art-with-the-fusion-touch/article16145216.ece. பார்த்த நாள்: 2018-05-14. 
  3. "Theyyam, of Kerala include Muslim characters". One India. 6 March 2008. https://www.oneindia.com/2008/03/06/theyyam-hindu-ritual-art-form-kerala-include-muslim-characters-1204787160.html. பார்த்த நாள்: 2018-05-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவிலன்&oldid=3199481" இலிருந்து மீள்விக்கப்பட்டது