மார்க்லைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்லைட்டு
Marklite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCu5(CO3)2(OH)6 • 6H2O
இனங்காணல்
நிறம்நீலம்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
மேற்கோள்கள்[1]

மார்க்லைட்டு (Marklite) என்பது Cu5(CO3)2(OH)6 • 6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். துபிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செருமானிய கனிமவியலாளர் கிரிகோர் மார்கல் இக்கனிமத்தைக் கண்டுபிடித்தார்[2]. இவரை நினைவூட்டும் விதமாகவே கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. தென்மேற்கு செருமனியில் உள்ள பிளாக் பாரசுட்டு மலைகளில் பிரீட்ரிக்-கிறிசுடியன் சுரங்கத்தின் குவியல்களில் மார்க்லைட்டின் மாதிரி வகையை மார்கல் கண்டறிந்தார்[3]. மார்கல் மிருதுவான பாறையியல் மற்றும் புவி வேதியியலில் நிபுணத்துவம் பெற்றவராவார். பிளாக் பாரசுட்டு பகுதியின் நீர் வெப்ப தாதுப் படிவுகளைப் பற்றி ஆய்வு செய்தார்[4]. செக் குடியரசின் அறிவியல் அகாடமியில் பணியாற்றிய இயற்பியல் நிறுவனத்தின் யாகுப் பிளாசில் மற்றும் அவருடன் பணிபுரியும் சக பணியாளர்கள் மார்க்லைட்டின் கட்டமைப்பை அடையாளம் கண்டனர்[5].

மார்க்லைட்டுப் படிகங்கள் 0.2 மி.மீ நீளமான மெல்லிய தகடுகள் போல உள்ளன. கியார்கைட்டு, கிளாரைட்டு, குப்ரோவார்ட்டினைட்டு அசூரைட்டு மாலகைட்டு போன்ற கனிமங்களை ஒத்த கனிமமாக மார்க்லைட்டும் காணப்படுகிறது[4].

கிடைக்குமிடம்[தொகு]

செருமனி நாட்டின் பிரீட்ரிக்-கிறிசுட்டியன் சுரங்கம், வைல்டுசாப்பாச்சு சமவெளி, பிளாக் பாரசுட்டு வனப்பகுதி, பேதென்-உர்டெம்பெர்க்கு ஆகிய இடங்களில் மார்க்லைட்டு கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Braunerite: Braunerite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-08-25.
  2. "New Mineral Listing | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-09-05. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  3. "Carbon Mineral Challenge Update Spring 2016: Four New Minerals Found | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  4. 4.0 4.1 "Marklite: Marklite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  5. "New Minerals and Mineralogy of the 21st Century International Scientific Symposium Jachymov 2016". Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்லைட்டு&oldid=3567347" இலிருந்து மீள்விக்கப்பட்டது