மாரியம்மன் கோவில், பிளகூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரியம்மன் கோயில், பிளகூல் என்பது இந்து மதக் கடவுளான மாரியம்மனுக்கு அமைக்கப்பட்ட ஒரு முக்கியக் கோவில் ஆகும். இக்கோயில் இந்தியாவின், கேரள மாநிலத்தில், தலச்சேரியின் தெற்குப் பகுதியில் சைதார்பள்ளிக்கருகில் உள்ள பிளகூல் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1] இந்த கோவிலில் உள்ள தெய்வம், தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக உருவானதாக நம்பப்படுகிறது. இந்தக் கோவிலை பிபி அப்பு மாஸ்டர் மற்றும் குடும்பத்தினர் பராமரிக்கின்றனர். பிபி அப்பு மாஸ்டர் ஒரு ஆசிரியர் ஆவார். இவர் தலசேரியில் ஒரு பள்ளியை நிறுவினார்.

கோயிலின் தலைமை பூசாரி இரத்தினவேல், பொதுவாக மணி மாஷ் (மணி மாஸ்டர்) என்று அழைக்கப்படுகிறார். கோயிலின் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் நீடிக்கும். அக்னிக்கரகம், பூக்கரகம், பூமிதி, குருதிகுளி, பலிபூசை ஆகியவை ஆண்டுத் திருவிழாவின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்தக் கோயில் மிகவும் பாரம்பரியமான பூஜை வடிவங்களில் ஒன்றைப் பின்பற்றுகிறது, மேலும் இந்தப் பகுதியில் மிகவும் விரும்பப்படும் கோயில்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Legend of Mariamman and Mariamma Temples in Kerala". Kerala mythology blogspot. 12 January 2017. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)