மல்சா மகால்

ஆள்கூறுகள்: 28°36′35″N 77°10′52″E / 28.609595°N 77.181104°E / 28.609595; 77.181104
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்சா மகால் (Malcha Mahal) விலாயத் மகால் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் புது தில்லியின் சாணக்கியபுரி பகுதியில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தில்லி புவி நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள துக்ளக் காலத்து வேட்டையாடும் விடுதியாகும்.[1][2] இது 1325 இல் தில்லி சுல்தானகத்தை[3] ஆண்ட பிரூஸ் ஷா துக்ளக்கால் கட்டப்பட்டது. அவத்தின் "பேகம் விலாயத் மகால்" சுயமாக அறிவித்துக் கொண்டதை அடுத்து, இது விலாயத் மகால் என்று அறியப்பட்டது, அவர் ஔத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, மே 1985 இல் இந்திய அரசாங்கத்தால் அந்த இடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது [1][4][5] செப்டம்பர் 10, 1993 அன்று, விலாயத் தனது 62 வது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.[6] இலக்னோவில் உள்ள வாஜித் அலி ஷாவின் வழித்தோன்றல்கள், நியூயார்க் டைம்ஸின் புலனாய்வுப் பத்திரிகையின் தகவலை மேற்கோள் காட்டி [7] விலயத்தின் குடும்பம் மோசடியான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறுகிறார்கள்.[8]

தற்போது கட்டடம் பெரும்பாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. விலாயத்தின் மரணத்திற்குப் பிறகு, பேகத்தின் மகள் சகினா மகால் மற்றும் மகன் இளவரசர் அலி ராசா (என்கிற சைரஸ்) ஆகியோர் தொடர்ந்து இதில் வசித்து வந்தனர். சைரஸ் 2017 இன் பிற்பகுதியில் இறந்தார்; அவரது சகோதரி அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், ஆனால் சரியான தேதி தெரியவில்லை.[1][3][4][6][9][10][11][12][13]

வரலாறு[தொகு]

இரைசினா குன்றைச் சுற்றியுள்ள வரலாற்று கிராமங்களில் ஒன்றான மல்சாவில் மல்சா மகால் அமைந்துள்ளது. 1920 களில் தலைநகர் புது தில்லியைக் கட்டும் போது, குடியரசுத் தலைவர் இல்லம் உட்பட இரைசினா, தோடாபூர், அலிகஞ்ச், பில்லாஞ்சி, ஜெய்சிங்புரம் மற்றும் குசாக் ஆகிய கிராமங்களுடன் மல்சாவும் ஆங்கிலேயர்களால் மாற்றப்பட்டது.[14]

விலாயத் மகால் வசிக்கும் இடம்[தொகு]

2014 இல் மல்சா மகாலின் வாயில்

1984 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தலையீட்டைத் தொடர்ந்து , அயோத்தியின் கடைசி நவாப் வாஜித் அலி ஷாவின் கொள்ளுப் பேத்தி பேகம் விலாயத் மகாலுக்கு, மே 1985 இல் இந்த மகால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாஜித் அலி ஷாவின் ராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டபோது அவத்தில் உள்ள தனது மூதாதையர் சொத்துக்களை இழந்ததற்கு இழப்பீடு வழங்கக் கோரி, பேகம் விலாயத் மகால் ஒன்பது ஆண்டுகளாக புது தில்லி ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையில் வசித்து வந்தார்.[1][3][13] பேகம் விலாயத் மகால் அக்டோபர் 1993 இல் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

22 நவம்பர் 2019 அன்று, த நியூயார்க் டைம்ஸின் நியூ இங்கிலாந்து பணியகத் தலைவர், எலன் பேரி, ஒரு நீண்ட புலனாய்வுக் கடுரையை வெளியிட்டார். அதில் விலாயத்துக்கும் அவத் அரச குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். மாறாக, அவர் இலக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் இனாயத்துல்லா பட்டின் விதவை எனவும், அவரது மூத்த மகன் சாகித் பட் இங்கிலாந்தில் வசிப்பதையும் வெளிபடுத்தினார்.[7]

மறுசீரமைப்பு[தொகு]

அக்டோபர் 2019 இன் பிற்பகுதியில், மல்சா மகாலை மறுசீரமைக்க INTACH முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டது.[15]

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Abha Rani. (1991). Tughluq Architecture of Delhi. Bharati Prakashan.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


  1. 1.0 1.1 1.2 1.3 "The prince takes his bicycle to buy meat for his dogs". www.sunday-guardian.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
  2. Malcha History (2014-10-12), Malcha Mahal, பார்க்கப்பட்ட நாள் 2016-11-15
  3. 3.0 3.1 3.2 Elizabeth Bumiller (The Washington Post) (12 December 1986). "This Royal Family's Palace Is No Taj Mahal: Lizards and Bats Overrun Decrepit 600-Year-Old Monument in New Delhi". LA Times. http://articles.latimes.com/1986-12-12/news/vw-2459_1_royal-family. 
  4. 4.0 4.1 "Heritage: In isolation at Malcha Mahal". தி இந்து. 20 June 2005. Archived from the original on 28 June 2005. பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  5. MILES, JAMES (1985-06-30). "India's Depot Princess Finally Gets Her Palace" (in en-US). Los Angeles Times. http://articles.latimes.com/1985-06-30/news/mn-68_1_railway-station. 
  6. 6.0 6.1 Barry Bearak (20 November 1998). "New Delhi Journal; Bats in a Dreary Lodge Where Life Imitates Poe". New York Times. பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  7. 7.0 7.1 Ellen Barry (22 November 2019). "The Jungle Prince of Delhi". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  8. "Descendant of Wajid Ali Shah challenges lineage claim". The Times of India. 13 November 2017. https://timesofindia.indiatimes.com/india/descendant-of-wajid-ali-shah-challenges-lineage-claim/articleshow/61632380.cms. 
  9. Rowlatt, Justin (2017-11-05). "The lonely death of Delhi's jungle prince" (in en-GB). BBC News. https://www.bbc.co.uk/news/stories-41861843. 
  10. "Reclusive Awadh prince dies a pauper in decrepit 14-century Delhi lodge". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  11. "Prince Ali Raza, last descendent of Oudh's royal family, dies a lonely death". India Today (in ஆங்கிலம்). 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
  12. "Royal siblings reflect struggle of India's modern aristocrats". USA Today. Associated Press. 5 June 2004. http://usatoday30.usatoday.com/news/world/2004-06-05-royal-ruination_x.htm. 
  13. 13.0 13.1 "Cut off and forlorn in Malcha Mahal". Deccan Herald. 29 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-11-15.
  14. Avishek G Dastidar; Nivedita Khandekar (5 January 2011). "From rocks & ridge rose a New Delhi". Hindustan Times. Archived from the original on 14 March 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-03-12.
  15. "Delhi's mysterious Malcha Mahal ruin to be restored". Financial Express. 3 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்சா_மகால்&oldid=3847914" இலிருந்து மீள்விக்கப்பட்டது