மருத்துவமனை கதிர் விபத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவமனை கதிர்வீச்சு விபத்துகள் (radiation accidents in hospitals) என்பது கதிர் மருத்துவத் துறையில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட விபத்துக்களைக் குறிக்கும். இத்தகைய இரு விபத்துகள் கீழே தரப்பட்டுள்ளன:

  • சான் சுவான் டி டையோசு மருத்துவமனை கதிர் விபத்து (San Juan de Dios RT Accident)

1996 ல் இவ்விபத்து நடந்தது. கோஸ்டரிக்கா நாட்டில் 1996 ல் நடந்த நிகழ்வாகும். அங்குள்ள மருத்துவ மனையில் அல்சியான்2 கதிர் மருத்துவக் கருவியில் ஏற்பட்டது. கோபால்ட் 60 கதிர் மூலமுடைய கருவியில் பயன்பாட்டிற்கு முந்தைய அளவீடுகளை மேற்கொண்ட போது ஏற்பட்ட தவறு காரணமாக நிகழ்ந்தது. இதனால் ஆகஸ்ட்-செப்டம்பர் 1996 ல் 114 பேர் அதிக கதிர் வீச்சிற்கு ஆளாகினர். 13 பேர் மரணமுற்றனர். பழைய கோபால்ட் மூலத்தினை மாற்றும் போது தவறு ஏற்பட்டதால் இவ்விபத்து நிகழ்ந்தது.[1][2]

  • சரகோசா மருத்துவமனை விபத்து

1990-டிசம்பர் மாதத்தில் இசுபெயின் நாட்டிலுள்ள சரகோசா மருத்துவமனையின் கதிர்மருத்துவத் துறையில் விபத்து ஏற்பட்டது. இதில் 27 நோயாளிகளாவது அதிக கதிர்வீச்சிற்கு ஆளாகினர். இதில் 11 பேர் இறக்க நேர்ந்தது. இது பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் (IAEA) தகவல் ஆகும். 24 லட்சம் யுரோ இழப்பீடாக வழங்கப்பட்டது.[3][4][5]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]