மரியம் சுல்தானா நூஹானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியம் சுல்தானா நூஹானி
பிறப்பு(1932-06-19)19 சூன் 1932
ஐதராபாத், சிந்து மாகாணம், பாக்கித்தான்
இறப்பு(2014-11-25)25 நவம்பர் 2014
ஐதராபாத்
தொழில்கல்வியாளர், கல்வித் தலைவர், ஆசிரியர்
குடியுரிமைபாக்கித்தானியர்
கல்விஇசுலாமியக் கலாசாரத்தில் முதுகலை
காலம்1953 - 2014
குறிப்பிடத்தக்க விருதுகள்காதிஜத்-உல்-குப்ரா விருது (1962)
துணைவர்அப்துல் ரகுமான் நூஹானி
குடும்பத்தினர்குலாம் காதிர் நூகானி (தந்தை)
அப்துல் சத்தார் நூஹானி (சகோதரர்)
பரீத் நவாஸ் பலூச் (உறவினர்)
நசீர் நவாசு பலூச் (உறவினர்)

மரியம் சுல்தானா நூஹானி (Mariyam Sultana Noohani) (1932 சூன் 19 - 2014 நவம்பர் 25) பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில், ஐதராபாத்த்தில் கல்வியாளாராகவும், கல்வித் தலைவராக இருந்தார். இவர் அனைத்து பாக்கித்தான் பெண்கள் சங்கம் மற்றும் பாக்கித்தான் பெண்கள் அமைப்பின் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கினார். [1] இவர் குறிப்பாக சிறுமிகளுக்கு கல்வி மற்றும் பயிற்சியளித்தார். மேலும் பள்ளிப்படிப்பின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தினார். [2] சிந்து பொது சேவை ஆணையம் மற்றும் சிந்து பல்கலைக்கழகத்துடன் ஒரு நிபுணராக இவர் தொடர்பு கொண்டிருந்தார். ஐதராபாத் பிராந்தியத்தின் கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் "அபா மரியம் நூஹானி" (மூத்த சகோதரி) என்று பிரபலமாக அறியப்படுகிறார்.

குழந்தைப் பருவமும் கல்வியும்[தொகு]

மரியம் நூஹானி 1932 சூன் 19 அன்று பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் ஐதராபாத்தின் நில உரிமையாளரும் பத்திரிகையாளருமான ரைஸ் குலாம் காதிர் கான் நூஹானி என்பவருக்கு மகளாகப் பிறந்தார்.[3] இவருக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இருந்தார்கள். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஐதராபாத்தின் நியூ மாடல் பெண்கள் பள்ளியிலிருந்து பெற்றார் . ஐதராபாத்தில் உள்ள மடரதுல் பனாட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றார். முஸ்லிம் வரலாற்றில் இளங்கலைப் பட்டத்தையும், இசுலாமிய கலாச்சாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.

தொழில்[தொகு]

1953 இல் ஐதராபாத் அரசு பெண்கள் கல்லூரியில் இசுலாமிய வரலாற்றின் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1958இல் உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1970 ஏப்ரல் 24 முதல் 1971 மே 21 வரை இவர் சுக்கூர் அரசு பெண்கள் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். 1971 மே முதல் 1972 அக்டோபர் வரை இவர் ஜாம்ஷோரோ பணியகத்தில் பாடத்திட்ட நிபுணராக இருந்தார். 1972 அக்டோபர் முதல் 1973 அக்டோபர் வரை சுக்கூர் அரசு பெண்கள் கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் நியமிக்கப்பட்டார். 1974 மே 8 முதல் 1983 மே 3 வரை இவர் ஐதராபாத் பிராந்தியத்தின் கல்லூரிக் கல்வி துணை இயக்குநராக பணியாற்றினார். மேலும் 1996 செப்டம்பர் 26 அன்று ஐதராபாத் பிராந்தியத்தின் கல்லூரி கல்வி இயக்குநராக சேர்ந்தார். 1983 முதல் 1990 வரை ஐதராபாத் ஜூபேதா பெண்கள் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.

2014 சூ ன் 26 அன்று, அவர் முதல்வராக இருந்த அரசு ஜூபேதா பெண்கள் கல்லூரியில் தனது பெயரில் ஒரு நூலகத்தைத் திறந்து வைத்தார்.

இறப்பு[தொகு]

இவர் 2014 நவம்பர் 25 அன்று இருதய நோயால் இறந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sindhipeoples (2014-10-06). "سنڌي شخصيتون: آپا مريم نوحاڻي - عطيه علي ٻرڙو". سنڌي شخصيتون. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  2. "Rich tribute paid to Professor Mariyam Sultana – Business Recorder" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  3. "آپا مريم سلطانا نوحاڻي : هڪ شفيق استاد ۽ مثالي عورت". SindhSalamat. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  4. Correspondent, The Newspaper's Staff (2014-11-26). "Academic Apa Noohani passes away". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_சுல்தானா_நூஹானி&oldid=3113099" இலிருந்து மீள்விக்கப்பட்டது