மராத்தா மந்திர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மராத்தா மந்திர்
மராத்தா மந்திர் is located in Mumbai
மராத்தா மந்திர்
முகவரிமராத்தா மந்திர் மார்க், ரிசர்வ் வங்கி பணியாளர் காலனி
நகரம்மும்பை
நாடுஇந்தியா
ஆள்கூறுகள்18°58′16″N 72°49′20″E / 18.971183°N 72.822134°E / 18.971183; 72.822134
கொள்ளளவு1000
திறப்பு16-அக்டோபர்-1958
மராத்தா மந்திர் திரைப்பட டிக்கெட்

மராத்தா மந்திர் (Maratha Mandir) என்பது இந்திய நாட்டின், மகாராட்டிரா மாநிலத்தின், மும்பை மாநகராட்சியின், மராத்தா மந்திர் மார்க்கில் அமைந்துள்ள ஒரு திரையரங்கம் ஆகும். [1] இத்திரையரங்கு 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. 1000 இருக்கைகளைக் கொண்டுள்ளது. [2] 1960 ஆம் ஆண்டு மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில், ஆடம்பரமான திரைப்பட வெளியீட்டு விழாக்களுக்கு பெயர் பெற்றது இத்திரையரங்கம் ஆகும். ஆனால் மல்டிபிளெக்சு என்ற தொழில்நுட்பத்தின் அறிமுகம் "வர்க்க" பார்வையாளர்களை இத்திரையரங்க வரலாற்றில் இருந்து திசை திருப்பியது. [3] 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வெளியான தில்வாலே துல்கனியா லே சாயேங்கே என்ற திரைப்படம் 1009 வாரங்கள் திரையிடப்பட்டதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இத்திரையரங்கத்தில் வெளியிடப்பட்டு சாதனை படைத்ததாக அறியப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, படம் தொடர்ந்து 1230 வாரங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரையரங்கம் மும்பையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாகும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maratha Mandir Cinema Location". One India. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.
  2. Dilwale Dulhania Le Jayenge: (The "Brave-Hearted Will Take the Bride"). British Film Institute. https://archive.org/details/dilwaledulhanial00anup. 
  3. King of Bollywood: Shah Rukh Khan and the Seductive World of Indian Cinema. Grand Central Publishing. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மராத்தா_மந்திர்&oldid=3758620" இலிருந்து மீள்விக்கப்பட்டது