உள்ளடக்கத்துக்குச் செல்

மரங்குளங்கரா கிருஷ்ணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் முகப்பு

மரங்குளங்கரா கிருஷ்ணர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில்வென்னாலா - ஈரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலாகும். [1] இக்கோயில் விஷ்ணுவின் அபிமான கோயிலாகும். பாலாரிவட்டம், திருப்பூணித்துரா, வைட்டிலா ஆகிய இடங்களில் இருந்து சாலை வழியாக இக்கோயிலை எளிதில் அடையலாம். இங்குள்ள மூலவர் பாலகிருஷ்ணர் எனப்படுகின்ற குழந்தை வடிவ கிருஷ்ணர் ஆவார். இந்த மூலவரை உள்ளூரில் "குழந்தைகளுக்க்ன சிறப்பு மருத்துவர்" என்று அழைக்கிறார்கள்.

புராணம்[தொகு]

கிருஷ்ணரின் அவதாரத்தின் நோக்கம் கம்சனைக் கொல்வது என்பதாகும். பூதனையை கிருஷ்ணருக்கு கொடிய நஞ்சினை பாலாக ஊட்டிய தருணமே கம்சன் கிருஷ்ணனைக் கொல்வதற்கான நேரமாகும். அந்த நேரத்தில் கிருஷ்ணர் பூதனையின் ஆத்மாவையே உறிஞ்சினார். இவ்வகையில் பூதனை முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. அப்போது விஷ்ணு, யசோதையின் முன் தோற்றினார். அப்போது அவள் குழந்தையின் உடலில் நஞ்சு ஏறியதாக சந்தேகப்பட்டார். கிணற்றிலிருந்து அமிர்தத்தை எடுத்து ஊற்றினார். இவ்வாறாக இக்கோயில மரங்குளங்கரா என்ற பெயரைப் பெற்றது. அவ்வகையில் இக்கோயலுக்கு 'கொல்ல வந்த பெண்ணைக் கொன்றவன்' என்று பொருள்படும்படி மரம்குளங்கரா என்ற பெயர் வந்தது. இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படுகின்ற தண்ணீர் குழந்தைகளைக் குளிப்பாட்ட பயன்படுத்தப்படுகிறது.

தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலின் துணைத் தெய்வங்கள் அய்யப்பன், அந்திமஹாகாலன், அயயாக்ஷி, சிவன், பார்வதி, நாகர்கள் ஆகியவையாகும்.

சிறப்பு[தொகு]

தீயப்பறவைகளிடமிருந்து (பக்ஷிபீடா) சிறு குழந்தைகளுக்கு இந்த கிருஷ்ணன் பாதுகாப்பு அளிப்பதாக நம்பப்படுகிறது. "சோறுனு" எனப்படுகின்ற முதல் முறையாக சோறு கொடுக்கும் சடங்கு குழந்தைகளுக்கு இங்கு நிகழ்த்தப்படுகிறது. இக்கோயிலின் முன்பாக கோயிலின் புனித தீர்த்ததத்தால் குழந்தைகள் குளிப்பாட்டப்படுகின்றன. குழந்தைகளை துடைக்காமல், இயற்கையாக உலர விடப்பட்டு, தரிசனத்திற்காக உள்ளே கொண்டு வந்துவிடுகின்றார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Maramkulangara Krishna Temple, Manorama Online