மன்த்லி ரிவ்யு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்த்லி ரிவ்யு
இதழாசிரியர்ஜான் பெல்லாமி ஃபாஸ்டர்
வகைமார்க்சியம், சமூகவுடைமை, அரசியல் பொருளாதாரம், பொருளியல், சமூக அறிவியல், மெய்யியல்
இடைவெளிமாத இதழ் (double issue July–August)
வெளியீட்டாளர்மன்த்லி ரிவ்யு அறக்கட்டளை
தொடங்கப்பட்ட ஆண்டு1949
நாடுஅமெரிக்கா
அமைவிடம்நியூயார்க்கு நகரம்
மொழிஆங்கிலம்
வலைத்தளம்monthlyreview.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
ISSN0027-0520

மந்த்லி ரிவியூ (Monthly Review) என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து மாதந்தோறும் வெளியிடப்படும் ஒரு சுயாதீன சோசலிச இதழாகும் . 1949 இல் நிறுவப்பட்ட இந்த இதழ் அமெரிக்காவில் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட நிகரமை இதழாகும்.

வரலாறு[தொகு]

நிறுவுகை[தொகு]

1942 ஆண்டு நடைபெற்ற அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்ட என்றி ஏ. வாலஸ் தோல்வியுற்றார். அதன்பிறகு அவரின் இரண்டு முன்னாள் ஆதரவாளர்களும் நியூ ஹாம்சயரில் உள்ள பண்ணையில் சந்தித்தனர். அவர்கள் இருவருவரும் ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் முன்னாள் சக ஊழியர்களாக இருந்த இலக்கிய அறிஞர் மற்றும் கிறித்துவ நிகரமையாளரான எஃப்.ஓ. "மாட்டி" மாத்திசென் மற்றும் மார்க்சிய பொருளாதார நிபுணர் பால் ஸ்வீசி ஆவர். கலிபோர்னியாவில் ஒரு வாகன விபத்தில் மத்திசெனின் தந்தை இறந்த பிறகு தந்தையின் சொத்துகள் அவரின் வசம் வந்து சேர்ந்திருந்தது மேலும் பணத்திற்கு அவசரத் தேவையும் அவருக்கு இருக்கவில்லை. இதனால் இந்த இதழை துவக்கி நடத்த ஆண்டுக்கு $5,000 என மூன்றாண்டுகள் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டார். 1950 இல் மத்திசென் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, மாத்தீசனின் பண்ணை நிர்வாகிகளால் இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளில் கொடுக்கும் பணத்தின் அளவு ஆண்டுக்கு $4,000 என்று குறைக்கப்பட்ட போதிலும், மாதீசனின் பணம் மன்த்லி ரிவ்யுவைத் தொடங்குவதை சாத்தியமாக்கியது. [1]

இதழின் துவக்கத்தில் இருந்தே தலையங்கப் பணியை ஸ்வீசியும், அவரது இணை சிந்தனையாளரான பிரல இடதுசாரி எழுத்தாளர் லியோ ஹூபர்மேன் ஆகியோர் கையாண்டனர். 1968 இல் ஹூபர்மேன் மாரடைப்பால் இறக்கும் வரை மன்த்லி ரிவ்யுவில் முழுநேரமாக பணியாற்றினார். [2]

மன்த்லி ரிவ்வின் முதல் இதழ் புகழ்பெற்ற இயற்பியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் " ஏன் சோசலிசம்? " என்ற கட்டுரையுடன் வெளிவந்தது. [3] [4] [3] இந்த இதழின் வரலாற்றில் சே குவேரா, சார்த்தர் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

மன்த்லி ரிவ்யு 1949 இல் தொடங்கப்பட்டபோது, வெறும் 450 பிரதிகள் மட்டுமே புழக்கத்துக்கு வந்தது. வாசகர்களில் பெரும்பாலோர் ஹூபர்மேன் அல்லது ஸ்வீசுக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர்களாக இருந்தனர். [5] இதழின் சித்தாந்தமும் வாசகர்களும் 1948 இல் நிறுவப்பட்ட சுதந்திர சோசலிச வாராந்திர செய்தித்தாளான தி நேஷனல் கார்டியனுக்கு இணையாக இருந்தது. அமெரிக்காவில் பழமைவாத அரசியல் சூழல் இருந்தபோதிலும், இந்த இதழ் குறிப்பிடத்தக்க சந்தாதாரர்கள் எண்ணிக்கையை விரைவில் அடைந்தது. இதன் விற்பனை 1950 இல் 2,500 ஆகவும், 1954 இல் 6,000 ஆகவும் உயர்ந்தது. [6]

இன்றைய காலம்[தொகு]

2006 முதல், ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். பிரட் கிளார்க் இணை ஆசிரியராக உள்ளார். மேலும் இதழுக்கு ஒரு உதவி ஆசிரியரும் ஆசிரியர் குழுவும் உள்ளது. [7]

ஆங்கிலம் தவிர பிற பதிப்புகள்[தொகு]

அமெரிக்காவை தளமாகக் கொண்டு வெளிவரும் இந்த இதழ் தவிர, மன்த்லி ரிவ்யுவின் ஏழு சகோதரி பதிப்புகள் வெளியாகின்றன. அவை கிரேக்கம்; துருக்கி; எசுபானியா; தென் கொரியா; அத்துடன் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, பெங்காலி என தனித்தனி பதிப்புகள் வெளியாகின்றன. [8]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. C. Phelps (1999). "Introduction: A Socialist Magazine in the American Century". Monthly Review 51 (1): 1–21. doi:10.14452/MR-051-01-1999-05_1. 
  2. Phelps, C. (1999). "Introduction: A Socialist Magazine in the American Century". Monthly Review 51 (1): 1–21. doi:10.14452/MR-051-01-1999-05_1.  p. 3-4
  3. 3.0 3.1 "About Monthly Review".
  4. Einstein, A. (2009). "Why Socialism?". Monthly Review 61 (1): 55–61. doi:10.14452/MR-061-01-2009-05_7.  HTML version available at the Monthly Review website: "Why Socialism?". May 1949. பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
  5. Savran, S.; Tonak, E. A.; Sweezy, P. M. (1987). "Interview with Paul M. Sweezy". Monthly Review 38 (11): 1. doi:10.14452/MR-038-11-1987-04_1.  p. 43-44
  6. Phelps, C. (1999). "Introduction: A Socialist Magazine in the American Century". Monthly Review 51 (1): 1–21. doi:10.14452/MR-051-01-1999-05_1.  p. 7-9.
  7. Monthly Review Archives, "Editorial Team."
  8. "Foreign Editions of Monthly Review". Archived from the original on 2017-08-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்த்லி_ரிவ்யு&oldid=3727873" இலிருந்து மீள்விக்கப்பட்டது