மதன் மோகன் மகதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதன் மோகன் மகதோ (Madan Mohan Mahato) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1927 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார்.

மகதோ 2 ஜனவரி 1927 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதியன்று புருலியா மாவட்டம் அகர்தி கிராமத்தில் சாய்ராம் மகதோவின் மகனாகப் பிறந்தார். [1] ஊல்முரா எச். இ பள்ளியில் படித்தார். [1] மகதோ ஒரு பள்ளி ஆசிரியராக வும் பணிபுரிந்தார். [1] அகர்தி கிராமத்தில் வசித்து வந்த இவர், அங்குள்ள பல உள்ளூர் சங்கங்களில் அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். [1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் காசிபூர் தொகுதி காங்கிரசு குழுவின் துணைத் தலைவராகவும் புருலியா மாவட்ட காங்கிரசு குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். [1]

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் காசிபூர் தொகுதியில் 11,552 வாக்குகள் (38.52%) பெற்று மகதோ வெற்றி பெற்றார். [2] அடுத்த 1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 14,220 வாக்குகள் (57.28%) பெற்று காசிபூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். [3]

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் ஊரா தொகுதியில் மகதோ போட்டியிட்டு 25,439 வாக்குகள் (27.74%) பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 West Bengal (India). Legislature. Legislative Assembly (1974). Who's who 1972: General Election, March 1972. West Bengal Legislative Assembly Secretariat. பக். 38. https://books.google.com/books?id=I78yAAAAMAAJ. 
  2. Election Commission of India. West Bengal 1971
  3. Election Commission of India. West Bengal 1972
  4. Election Commission of India. West Bengal 1991
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_மோகன்_மகதோ&oldid=3822135" இலிருந்து மீள்விக்கப்பட்டது