மக்கின்டொஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகத்து 2007இல் விற்பனையான தற்கால "அனைத்தும் ஒன்றில்" வகை மாக்கின்டோஷ், ஐமாக்.
மக்கிண்டொஷ் (மக்கின்ரோஷ், மாக்கின்டோஷ், Macintosh) என்பது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஓர் இலகு தனிநபர் கணினியாகும். 1979 - 1984 காலத்தில் உருவாக்கப்பட்ட இது முதன்முதலில் 1984 ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்டது. கட்டளை வரி இடைமுகத்திற்குப் பதிலாக வரைகலை பயனர் இடைமுகம் (GUI) மற்றும் சுட்டியினைப் பாவித்து வணிக ரீதியில் வெற்றிபெற்ற முதற் தனிநபர் கணினி இதுவாகும்.