மகிசாடல் தேர் யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:Infobox Rathayatra

 

மேற்கு வங்கமாநிலம், புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள மகிசாடலில் ஆண்டுதோறும் மகிசாடல் தேர் யாத்திரை நடத்தப்படுகிறது.இந்த தேரோட்டம் [1] 1776 ஆம் ஆண்டு மகிசாடல் ராச்சியத்தை ஆண்ட அரசி ஜானகி தேவியால் தொடங்கப்பட்டது.

தேரின் அமைப்பு[தொகு]

இந்த தேரோட்டத்தில் பயன்படுத்தப்படும் தேர் பல ஆண்டுகளில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது, ஆனால் அதன் முக்கிய அமைப்பு கடந்த 250 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. முதலில் 17 அடுக்குகளைக் கொண்டதாக காணப்பட்ட தேரின் அமைப்பு 1860 ம் ஆண்டில் 13 அடுக்குகளாகக் குறைக்கப்பட்டது, கீழிருக்கும் நான்கு முனை உச்சிகளிலும் கொடிகளை வைத்திருக்கும் மனிதர்களின் மரச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மரத் தேர் மொத்தமாக கொடி மற்றும் கலசங்களுடன் இணைந்து 75 அடி உயரம் கொண்டது மேலும் அடிவாரத்தில் 28 அடி X 28 அடி அளவுகள் அகலத்தைக் கொண்டதுமாகும்.. தேரின் சுவர்கள் பிரகாசமாக வர்ணங்களால் பூசப்பட்டு சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த உயரமும் பிரம்மாண்டமான தேர் 36 சக்கரங்களைக் கொண்டுள்ளது.ரதம் நான்கு தடித்த கயிறுகளால் இழுக்கப்படுகிறது, அதில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

2022 ம் ஆண்டு நடைபெற்ற ரத யாத்திரையை மகிசாடல் மன்னர் ஹரிபிரசாத் கர்க் துவக்கி வைத்தார். பல்கியில் (பல்லக்கு) வரும் அரசர் தேரின் கயிற்றில் முதல் இழுவையை ஆரம்பித்து ரத யாத்திரையைத் தொடங்குகிறார். தொடக்க விழா துப்பாக்கி சுடுதல் மூலம் தொலைதூரத்தில் இருக்கும் மக்களுக்கு அறிவிக்கப்படும்.மேலும் அவ்வப்போது ரத யாத்திரை முழுவதும் துப்பாக்கி சூடு தொடர்கிறது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு மகிசாடலில் ஒரு தாற்காலிகள் கண்காட்சியும் நடைபெற்றது. [3] 1776

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pati, Bhaskarbrata. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in bn). Ganashakti (Kolkata) இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160828195454/http://ganashakti.com/bengali/news_details.php?newsid=15216. 
  2. "மகிஷாடல் ரத யாத்திரை-மேற்கு வங்காளத்தின் மகிஷாடலின் உயர்ந்த தேர்".
  3. "250 ஆண்டுகள் பழமையான தேரின் கயிற்றை இழுத்து மகிஷாடல் ஒன்று கூடுகிறது". https://bengali.news18.com/news/south-bengal/ratha-yatra-2022-thousands-devotees-flocked-at-mahishadal-ratha-yatra-2022-rm-839246.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிசாடல்_தேர்_யாத்திரை&oldid=3701561" இலிருந்து மீள்விக்கப்பட்டது