உள்ளடக்கத்துக்குச் செல்

மகாத்மா காந்தி நினைவு கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாத்மா காந்தி நினைவு கல்லூரி
Mahatma Gandhi Memorial College
குறிக்கோளுரை"சத்வத் சஞ்சயதே ஞானம்"
வகைதனியார்
உருவாக்கம்1949
சார்புமங்களூர் பல்கலைக்கழகம்
முதல்வர்டாக்டர் தேவிதாஸ் எஸ். நாயக்
அமைவிடம், ,
வளாகம்கிராமப்புறம்
இணையதளம்mgmudupi.ac.in

மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரி (Mahatma Gandhi Memorial College) என்பது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி நகரத்தில் அமைந்துள்ள கலை, வணிகம் மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி மணிப்பால் பொதுக் கல்வி அகாடமியால் நடத்தப்படுகிறது. கல்லூரி விளையாட்டு மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட பிற செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

வரலாறு[தொகு]

மகாத்மா காந்தி நினைவுக் கல்லூரியை மருத்துவரும் கல்வியாளருமான டி.எம்.ஏ. பாய் 1949 ஆம் ஆண்டு தொடங்கினார். இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இயங்குகிறது.[1]

கல்வித் திட்டங்கள்[தொகு]

கலை, வணிகம் மற்றும் அறிவியலில் பாடங்களில் பட்டப்படிப்புகளையும், மங்களூர் பல்கலைக்கழகம் உடன் இணைந்த ஜெர்மன் மொழி மற்றும் கணினி அறிவியலில் பட்டயப் படிப்புகளையும் வழங்குகிறது. [2] தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார சபையின் முதல்நிலை அங்கீகாரத்தைப் கல்லூரி பெற்றுள்ளது.

ஆராய்ச்சி[தொகு]

கல்லூரியில் மூன்று ஆராய்ச்சி மையங்கள் உள்ளன; ஒன்று யக்சகானா மற்றும் மற்றொன்று இராட்டிர கவி கோவிந்தா பாய் ஆராய்ச்சி மையம். இம்மையம் துளு மொழி திட்டத்தைச் செயற்படுத்தி துளு மொழி அகராதியை வெளியிட்டது. கல்லூரி வளாகத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கான வட்டார வள மையம் ஒன்றும் உள்ளது. [3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahatma Gandhi Memorial College Udupi".
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 21 June 2020. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Mahatma Gandhi Memorial College Udupi".
  4. "Mahatma Gandhi Memorial College Udupi".
  5. "'Novels, stories should be translated to Tulu'". 15 September 2019.

வெளி இணைப்புகள்[தொகு]