போர்ட்டிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமது நட்டின் சரித்திரத்தைப் பார்த்தோமானால் தற்போதைய போட்டிக்சன் அப்போது லுக்குட் அர்ருகேயுள்ள சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். 30 ஜூலை 1880இல் சிங்கபூரில் சிலாங்கூர் சுல்தான் அப்துல் சமாட், லுக்குட் மாவட்டத்தின் ஆட்சியாளர் ராஜா போட்,சுங்கை உஜோங்கைச் சேர்ந்த டத்தோ கெலானா மற்றும் பிரிட்டிஷ்க்கு இடையே சிங்கபூரில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பில் சிலாங்கூருக்குச் சொந்தமான லுக்குட் சுங்கை உஜொஙிடம் கொடுக்கப்பட்டது. சுங்கை உஜொங்ஙே நாளடைவில் நெகிரி செம்பிலான் என்று அறியப்பட்டது.

1820களில் போர்ட்டிக்சனைச் சேர்ந்த லுக்குட் எனும் பகுதியில் தகர தாது அதிகமாகக் காணப்பட்டதால் சினாவைலிருந்து புலம் பெயர்ந்த சுரங்கத் தொழிலாளர்களை வெகுவாகக் கவர்ந்தது இந்தப் பகுதி. பிரிட்டிஷைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் அவ்விடம் துறைமுகம் அமைப்பதற்கெற்ற தகுதிகளைப் பெற்றிருப்பதை உணர்ந்தனர். அதனால் பெங்காலான் கெம்பாசில் ஒரு துறைமுகம் அமைக்க திட்டமிட்டனர்.அதற்கு பொறுப்பு வகித்த அதிகாரியின் பெயர் டிக்சன் என்பதால் அவ்விடத்திற்கு போர்ட்டிக்சன் என்று பெயரிடப்பட்டது. போர்ட்டிக்சன் 1889ஆம் ஆண்டில் கூட்டமைக்கப்பட்ட மலயா மாநிலங்களின் மூத்த அதிகாரியான சர் ஜோன் பிரடெரிக் டிக்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

போர்ட்டிக்சன் ஒரு பரபரப்பான வர்த்தக மையமாக உருவெடுத்தது. போர்ட்டிக்சன் வட்டரத்தின் வளர்ச்சிக்காக இரயில் தண்டவாளம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது அது செயல்பாட்டில் இல்லை. என்னதான் போர்ட்டிக்சன் அபார வளர்ச்சியடைந்து வந்தாலும் இங்குள்ள கடற்கரை பகுதிகள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இராணுவத்தின் பெரும்பாலான இராணுவ முகாம்கள் போர்ட்டிசனில் அமந்துள்ளதாலும் தேசிய அளவிலான இராணுவ பணிகளை அடையாளம் காட்டும் வகையிலும் செப்டம்பர் 2009இல் நமது பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அவட்களால் இராணுவ பட்டிணம் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கு அமைந்துள்ள இராணுவ அருங்காட்சியகத்தைச் சென்று காணலாம்.

போர்ட்டிக்சனின் பொருளாதரத்திற்கு எண்ணெய் மற்றும் எரி வாயு தயாரிப்பு மற்றும் சுற்றுலாத்துறை பெருபங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. அவ்வகையில், போர்ட்டிசனில் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவற்றுள் ஷெல்(Shell) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை 1962லிருந்தும் பெட்ரோன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை(முன்னதாக எக்சோன் மோபில்- ExxonMobil Malaysia என்று அறியப்பட்டது) 1963லிருந்து செயல்பட்டு வருகிறது. மேலும், சுற்றுலாத்துறையை எடுத்துகொண்டால் இங்கு அமைந்துள்ள எண்ணற்ற கடற்கரைகளே சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவர்கிறது என்றால் அது மிகையாகாது. பல்வேறு நாடுகளிலிருந்தும் கண்டங்களிலிருந்தும்  வருகை புரியும் சுற்றுப்பயணிகள் தங்குவதற்கு ஏதுவாக ஆங்காங்கே பல தங்கும் விடுதிகள்  குவிந்து கிடப்பதைக் கண்கூடாகக் காணலாம். இது இவட்டாரத்தின் பொருளாதாரத்தை உயர்த்த பெரும் துணை புரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்டிக்சன்&oldid=3602419" இலிருந்து மீள்விக்கப்பட்டது