பை மாறிலியை விட 22/7 அதிகம் என்பதற்கான நிறுவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பையின் பெறுமானத்தைக் காட்டும் படம்

பை மாறிலியை விட 22/7 அதிகம் என்பதற்கான நிறுவல் (ஆங்கிலம்: Proof that 22/7 exceeds \pi) இங்கே வழங்கப்பட்டுள்ளது. கணித்தலை இலகுவாக்குவதற்காகப் பை என்ற கணித மாறிலியின் பெறுமானத்திற்குப் பதிலாக 22/7 என்ற பெறுமானம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் 22/7 என்பது பை மாறிலியை விட அதிகமானது.

பை என்பது அண்ணளவாக 3.14159 ஆகும். ஆகவே \pi < 22/7 ஆகும். ஏனெனில், 22/7 என்பதன் பெறுமானம் அண்ணளவாக 3.142857 ஆகும். \pi என்பது அண்ணளவாக 3.14159 என்பதைக் காட்டுவதை விட இங்கே குறிப்பிட்டுள்ள முறை மூலம் \pi < 22/7 எனக் காட்டுவதற்குக் குறைவான வேலை போதும்.

[தொகு] பின்னணி

\pi என்பதற்கான பொதுவான தசம அண்ணளவாக்கமாக 22/7 என்பது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் 22/7 என்பது \piஐ விட அதிகமாகும். இதனை அவ்விரு எண்களின் தசமப் பெறுமானங்களைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

\begin{align}
  \frac{22}{7} & = 3. \overline{142\,857}, \\
  \pi\,        & \approx 3.141\,592\,65\ldots
  \end{align}[1]

22/7 என்ற அண்ணளவாக்கத்தை \pi என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தியதற்கான எழுத்து மூலமான ஆதாரம் கிறிஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் ஆக்கிமிடீசால் எழுதப்பட்டுள்ளது. அவருடைய நிறுவலில் 22/7 எனும் பெறுமானமானது 96 பக்கங்களையுடைய ஒழுங்கான வட்டப் பல்கோணியின் சுற்றளவுக்கும் வட்டத்தின் விட்டத்துக்கும் இடையிலான விகிதத்தை விட அதிகம் எனக் காட்டப்பட்டுள்ளது.[2] பையிற்கான 355/113 என்ற இன்னுமோர் அண்ணளவாக்கம் மேலும் துல்லியமானதாகும். ஆனாலும் துல்லியம் குறைவான 22/7 என்ற அண்ணளவாக்கமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[3]

[தொகு] நிறுவல்

இதற்கான நிறுவலைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

 0 < \int_0^1 \frac{x^4(1-x)^4}{1+x^2} \, dx = \frac{22}{7} - \pi.

ஆகவே, 22/7 > \pi

[தொகு] மேற்கோள்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்