பேச்சு:விளையாட்டுகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய விளையாட்டுக்கள்
http://sports.indiapress.org/traditional_games.php


இவை விளையாட்டுக்களா? சிலம்பம் கும்மி மயில் ஆட்டம் கோலாட்டம் கும்மி காவடி ஆட்டம் பொய்கால் குதிரை ஆட்டம் தெரு கூத்து ஒயில் ஆட்டம் பாம்பாட்டம் உருமி ஆட்டம் புலி ஆட்டம் வில்லு பாட்டு

சிலம்பம், கோலாட்டம், கும்மி போன்றவற்றை விளையாட்டுகளில் சேர்த்துப் பேசுவதையும் எழுதுவதையும் அறிந்திருக்கிறேன். நிச்சயமாக வில்லுப்பாட்டை அல்ல. Mayooranathan 17:10, 7 ஆகஸ்ட் 2005 (UTC)
Silambam can be thought of as a martial art only not as a game. Villu pattu certainly not a game. all other things mentioned in the list can be thought of as some performing art only, not as a game.--ரவி (பேச்சு) 17:50, 7 ஆகஸ்ட் 2005 (UTC)
இரா.பாலசுப்பிரமணியம் என்பவர் எழுதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் 1981ல் வெளியிடப்பட்ட தமிழர் நாட்டு விளையாட்டுக்கள் என்னும் நூலில் காணப்படும் பல்வேறு விளையாட்டுக்களில் ஒன்றாகச் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலில் வீர விளையாட்டுக்கள் என்னும் தலைப்பிட்ட பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது:
"வீரவிளையாட்டுக்களில் அமையும் போட்டியை இரண்டு வகையில் அடக்கலாம். மனிதனுக்கும் விலங்கிற்கும் அமையும் போட்டி ஒரு வகை. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அமையும் போட்டி மற்றொருவகை....... இரண்டாம் வகைக்கு 'சிலம்ப விளையாட்டினையும்', புலி வேடத்தினையும்' எடுத்துக்காட்டாகக் கூறலாம்". Mayooranathan 18:45, 7 ஆகஸ்ட் 2005 (UTC)

கட்டுரையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை சரியா?--கோபி 16:16, 20 ஜூலை 2006 (UTC)

சிறுவர் விளையாட்டுக்கள்[தொகு]

  • பழம் பொறுக்குதல்
  • நீர் நிரப்புதல்
  • சாக்கு ஓட்டம்
  • பந்தெறிதல்
  • எலுமிச்சம் பழ ஓட்டம்